மதுரையில் இந்து முன்னணி நிர்வாகிகளை வளைக்கும் போலீசார்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்து முன்னணி நிர்வாகிகள் எங்கிருக்கிறார்கள் என தமிழக போலீசார் ஒவ்வொருவராக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, திமுக அரசு எடுத்த நிலைப்பாட்டையே தவெக அரசும் எடுத்து, வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற திட்டமிடுகிறதா என இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, மதுரை திருப்பரங்குன்றத்தில், மலை மீதுள்ள தீபத்தூணில் நாளை தீபம் ஏற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நவம்பர் 24 ஆம் தேதி அன்று ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றும்படி, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

Hindu Munnani

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சீராய்வு மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் இருவரும் இன்று பணியில் இல்லை. மேலும், நாளை நவம்பர் 24ம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் இந்த மனுவை விசாரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி நிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார். டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், அரசு உயர் அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. விளைவுகளைச் சந்தித்துக் கொள்வோம் என ஸ்டாலின் அரசு உறுதியாக இருந்து, மேல்முறையீடு செய்தது. அதே நிலைப்பாட்டை தற்போதைய தவெக அரசும் எடுக்கவேண்டும் என முஸ்லீம் அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் தடுப்புகள் போடப்பட்டு, 70க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இந்தச் சூழலில், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் எங்கிருக்கின்றனர் என போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன. இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பரங்குன்றம் மலை பகுதியில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், போலீசார் அவர்களை தடுத்து வைக்க முயற்சிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படும் என்றால் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பலரை தற்போது எங்கு உள்ளார்கள் என காவல்துறை விசாரிப்பது ஏன்? அவர்களை வீட்டுச் சிறையில் வைப்பதற்கா? கடந்த ஆண்டு திமுக., ஆட்சியிலும் இதே போல் தானே நடந்தது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+