நடிகர் பிரபு செய்த ஒரே ஒரு செயல்.. இப்போ சோசியல் மீடியாவே கொண்டாடுது! இவர் தனி ரகம் தான்!
சென்னை: சில நடிகர்களை பார்க்கும்போது அவர்களுடைய படங்களை விட, நிஜ வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான் நம்மை கவரும். அப்படி ஒரு விஷயத்தை தான் நடிகர் பிரபு செய்திருக்கிறார். ஒரு வாட்ச்மேன் ஆசையாக செல்பி எடுக்க வந்தபோது, பிரபு அவரிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த ரசிகர்கள் "இவர் எப்போதுமே தனி ரகம் தான்" என்று பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியே சென்ற பிரபுவை பார்த்த வாட்ச்மேன் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். பொதுவாக நடிகர்களை நேரில் பார்க்கும்போது ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அதுவும் பிரபு மாதிரி ஒரு நடிகரை பார்த்தால் அந்த சந்தோஷத்தை சொல்லவே வேண்டாம். அந்த வாட்ச்மேனுக்கும் ஆசை இருந்திருக்கிறது.

செல்பி எடுத்த பிரபு
ஆனால் அவருக்கு தன்னிடம் இருந்த போனில் பிரபுவுடன் செல்பி எடுக்க தெரியவில்லை போல. இதை பார்த்த பிரபு அவரை அப்படியே அருகில் அழைத்து கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுக்க முயற்சி செய்கிறார். அதோடு அங்கிருந்து இன்னொருவரின் உதவியுடன் அந்த வாட்ச்மேனுக்கு போட்டோ எடுத்து கொடுக்கிறார். செல்பி எடுத்ததும் அந்த வாட்ச்மேன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்த பிரபு அவருடைய கன்னத்தை, செல்லமாக தட்டி விட்டு சிரித்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.
பிரபு செய்த செயல்
அந்த ஒரு நிமிட வீடியோவில் பிரபுவின் முகத்தில் எங்கும் எரிச்சலோ, அசவுகரியமோ தெரியவில்லை. அவரை சுற்றி இருந்த ரசிகர்களிடமும் சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்து கொடுத்திருக்கிறார். ஒரு நடிகர் ரசிகர்களுடன் எப்படி நடந்து கொள்கிறார் என்பதே அவருடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்தும் என்று சொல்லும் அளவுக்கு இந்த வீடியோ இருக்கிறது.
சில நடிகர்களின செயல்கள்
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரபுவை பாராட்டுகிறார்கள். ஒரு சில படங்களில் நடித்து விட்டாலே ரசிகர்களிடம் பெரிய இடைவெளி விட்டு, அருகில் வரக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது என்று எப்போதும் பவுசர்கள் சூழ பில்டப் கொடுக்கும் சிலரை பார்த்திருக்கிறோம். சில இடங்களில் ரசிகர்களின் செல்போனை கூட சில நடிகர்கள் தட்டிவிடும் சம்பவங்களும் சர்ச்சை ஆகி இருக்கின்றன. ஆனால் இங்கே ஒரு பாதுகாவலர் ஆசையாக போட்டோ எடுக்க வந்திருக்கிறார், என்பதற்காக அவருடன் கட்டி அணைத்தபடியே போட்டோ எடுக்க உதவி செய்தது சந்தோஷமாக அனுப்பி இருக்கிறார் பிரபு. இதுதான் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
பிரபு வீட்டில் சாப்பாடு
பிரபுவை பற்றி பேசும் போது அவருடைய வீட்டில் நடக்கும் விருந்தோம்பலும் பலருக்கு நினைவுக்கு வருகிறது. சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து அந்த வீட்டில் சாப்பாடு, உபசரிப்பு என்றால் தனி மரியாதை தான் என்று திரைத்துறையை சார்ந்த பல்ரும் சொல்லியிருக்கிறார்கள். பிரபு வீட்டிற்கு சாப்பிட சென்றால் என்ன என்ன சாப்பிடுறீங்க என்று கேட்டுவிட்டு, ஒரு சாப்பாடுடன் முடித்து விடாமல் வித விதமான உணவுகளை அன்புடன் பரிமாறுவார்கள். இதுவரை சாப்பிடாத உணவுகளும் அங்கே சுவைக்க முடியும் என்று பல பிரபலங்களும் பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள்.
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் ரசிகர்களின் ஆசையை புரிந்து கொண்டு அவர்களை தன்னுடன் நெருக்கமாக உணர வைப்பவர்கள் கொஞ்சம் குறைவுதான். அந்த வகையில் பிரபு செய்த சின்ன செயல் அவருடைய பெரிய மனசை ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறது.




Click it and Unblock the Notifications
