ரொம்ப தப்பு.. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்.. தவெக அரசை விளாசிய பாஜக நயினார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவன் சார்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவதா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிக்காக சட்டம் ஒழுங்கை தவெக அரசு பணயம் வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Nainar Nagendran

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் மதுரை உலக தமிழ்ச் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், திமுக எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட ஆயிரக்காணோர் பங்கேற்றன.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவதா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிக்காக சட்டம் ஒழுங்கை தவெக அரசு பணயம் வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை எதிர்த்து மதுரையில் விசிக தலைவர் திரு. திருமாவளவன் தலைமையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தக் காவல்துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காலையில் பேரணிக்கு அனுமதி மறுத்தது மதுரை காவல்துறை,.

சில மணி நேரங்களிலேயே ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அவசரமாக அனுமதி வழங்கியது யாருடைய அழுத்தத்தால்? சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டிப் பேரணிக்குத் தடை விதித்த காவல்துறை, ஆளும் தவெக அரசின் கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்திருப்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

நாளை கார்த்திகை தீபத் திருநாள் நடைபெறவுள்ள சூழலில், மதுரையின் அமைதியைக் குலைக்கும் இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கூட்டணி நெருக்கடிகளுக்கும் வாக்கு வங்கி அரசியலுக்கும் அடிபணியாமல், உச்சநீதிமன்ற ஆணைப்படி நாளை தீபத்தூணில் எவ்விதத் தடையுமின்றி தீபம் ஏற்றப்படுவதையும் முழுமையான பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+