6 பேரை டேட் பண்ணி இருக்கிறேன்! உங்க கண்ணுக்கு எப்படி தெரிகிறேன்? பெண் கேள்வி.. வெடிக்கும் விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில், பெண் ஒருவர் பேசியது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இந்த வாரம், "பெண் சுதந்திரம் சரியான பாதையில் போகிறதா? இல்லையா?" என்ற தலைப்பில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது டேட்டிங் பற்றி ஒரு பெண் பேசியது தான் இணையத்தில் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வார தமிழா தமிழா

பொதுவாக, தமிழா தமிழா, நீயா நானா போன்ற விவாத நிகழ்ச்சிகளில் சமூகத்தில் இருக்கும் அவலங்கள் மற்றும் பிரச்சனைகளின் அடிப்படையில் விவாதங்கள் வைக்கப்படுகிறது. அதில் சில தலைப்புகள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விவாதத்தை ஏற்படுத்தும். அதுபோலத்தான் இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த தலைப்பும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இந்த வாரம் "பெண் சுதந்திரம் சரியான பாதையை நோக்கி போகிறதா? இல்லையா?" என்ற விவாதம் தான் நடந்திருக்கிறது.

Tamizha Tamizha

யார் செய்தாலும் தவறுதான்

இதில் பெண் சுதந்திரத்தை சில தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு அணியினரும், சுதந்திரத்தை நாங்கள் சரியாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு அணியினரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற அணியில் இருந்த ஒரு பெண், "மது குடிப்பது ஆண் குடித்தாலும் தவறு என்று சொல்கிறோம். ஆனால் ஆண் குடிக்கலாம், நான் குடிக்க கூடாதா? என்று கேட்பதும் தவறு தானே? மது பழக்கம் உடல் நலத்துக்கு கேடு, சமுதாயத்திற்கு சீர்கேடு என்றால் அதை ஆண் குடித்தாலும் சரி, பெண் கொடுத்தாலும் சரி, யார் செய்தாலும் அது தவறுதான்" என்று சொல்கிறார்.

மது குடித்து அலப்பறை

அதுபோல இன்னொருவர் அந்த பெண் பேசியதற்கு சப்போர்ட் செய்து, "சமீபத்தில் கூட சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை பார்த்திருப்பீங்க, 2 பொண்ணுங்க குடித்துவிட்டு நடுரோட்டில் வண்டியை மறைத்து ஆபாசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதேபோல ஆண் செய்தால் அவரை உடனே ஜெயிலில் போட்டு விடுகிறார்கள். அப்போ அதே தவறை பெண் செய்தாலும் தப்பு தானே" என்று கேட்கிறார்.

அதற்கு பெண் சுதந்திரம் சரியான பாதையில் போகிறது என்று அணியில் இருந்து ஒரு பெண், "18 வயது ஆகிவிட்டால் ஒரு நாட்டை ஆளும் நபர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கும்போது, நாம செய்வது சரியா? தப்பா? என்று எங்களுக்கு தெரியாதா?" என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து டேட்டிங் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று தொகுப்பாளர் ஆவுடையப்பன் கேட்டிருக்கிறார்.

டேட்டிங் பற்றி பேசிய பெண்

அதற்கு அங்கிருந்தவர்கள் ஒருவர், "டேட்டிங் என்பது கட்டுப்பாடற்ற உறவு" என்று சொல்லி இருக்கிறார். உடனே எதிர் தரப்பில் பெண்கள் சுதந்திரம் சரியாக இருக்கிறது என்று அணியில் இருந்த ஒரு பெண், "எனக்கு இப்போ 28 வயது ஆகிறது. நான் கடந்த 8 வருஷத்தில் இதுவரைக்கும் 6,7 பேரை காதலித்திருக்கிறேன், அவர்களை டேட் பண்ணி இருக்கிறேன். நான் இப்போ உங்க கண்ணுக்கு எப்படி தெரிகிறேன்? நானும் காதலித்து திருமணம் பண்ணனும்னு தான் டேட் பண்றேன்.

இதுல என்ன தப்பு இருக்கு? பெண்களின் சுதந்திரம் பற்றியும், அவர்களின் பாலியல் தேவைகளை பற்றியும் பெண்களே பேசும்போது ஏன் பயப்படுறீங்க?" என்று பேசி இருக்கிறார்கள். இது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் அந்த பெண்ணை திட்டி விமர்சித்து வருகிறார்கள். இந்த பெண் சொன்ன கருத்து பற்றி உங்க கருத்து என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+