தமிழா தமிழாவால் வெடித்த விவாதம்.. மகனுக்கு கொம்பு சீவிய தாய்.. நறுக்குன்னு இளம் பெண் கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடந்த விவாதம் இப்போ சோசியல் மீடியாவிலும் பிரச்சனையாக வெடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எபிசோடு ஒளிபரப்பானது. அதில் கிராமத்து பெண்களை தன் மகனுக்கு திருமணம் செய்ய ஆசைப்படும் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அப்போது ஒரு பெண் தன்னுடைய மகனை வீட்டோட மாப்பிள்ளையாக அனுப்பி வைக்க மாட்டேன் என்று பேசி இருந்தார். அவருடைய மகன் வெளியிட்ட வீடியோ தான் இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழா தமிழா நிகழ்ச்சி விவாதம்

அந்த நிகழ்ச்சியில் அந்த பையனின் அம்மா பேசும்போது, என்னுடைய பையனை நான் எந்த சூழ்நிலையிலும் வீட்டோட மாப்பிள்ளையாக அனுப்ப மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். எதிர் தரப்பில் இருந்த ஒரு பெண் நாங்க மட்டும் காலம் காலமாக எங்களுடைய அம்மா அப்பாவை பிரிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்களே அதே போல உங்க பையன் எங்க குடும்பத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கு என்று கேட்டிருந்தார்.

அதற்கு அந்த அம்மா, அது எப்படி நான் என்னுடைய மகனை அனுப்பி வைக்க முடியும்? பொண்ணு தன் மாப்பிள்ளைக்கு வீட்டுக்கு வரவேண்டும் என்பது காலம் காலமாக இருக்கும் நடைமுறை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தொகுப்பாளர் அவருடைய பெண் நீங்க இந்த பொண்ணை (எதிர்தரப்பில் பேசிய பெண்) உங்களுக்கு மருமகளாக ஆக்கிக்குவிங்களா என்று கேட்க, கண்டிப்பாக மாட்டேன் என்று அந்த அம்மா அதிரடியாக பேச, அதற்கு எதிர் பேச்சு பேசி இந்த விவாதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த இளம் பெண்ணும் சிரித்துக் கொண்டிருந்தார்.

Zee Tamil Tamizha Tamizha

இளைஞர் வெளியிட்ட வீடியோ

அப்போது அந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணின் மகன் கூட எனக்கு கிராமத்து பெண்கள் வேண்டாம் நான் என்னுடைய மனைவி ஆசைப்பட்டால் என்னுடைய மனைவியுடன் தனியாக வாழ்வதில் தப்பு எதுவும் இல்லை என்று சொன்னார். ஆனால் அதற்கு அந்த பையனின் அம்மா, அது எப்படி நான் அனுப்புவேன்? என் பையனை பெண்ணின் வீட்டுக்கும் அனுப்பி வைக்க மாட்டேன் அதேபோல என் பையனை தனி குடித்தனம் இருக்க வைக்க மாட்டேன், நான் இருக்கிற வீட்டின் கீழ் பகுதியில் நான் இருக்கணும், பையனும் பொண்ணும் வேணும்னா மாடியில் இருக்கலாம் அவ்வளவுதான் என்று சொல்லி இருந்தார்.

இது அந்த நிகழ்ச்சியிலேயே விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் கழித்து அந்த பையன் தன்னுடைய அம்மாவோடு அந்த பெண் பேசிய ஸ்க்ரீன் ஷாட்டை ஒரு ரீல்ஸில் பகிர்ந்து அதில் தன்னுடைய அம்மாவுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசி இருந்தார். அதாவது உனக்கு வேணும்னா ஒரு பையனை பெத்து அந்த பையனை இன்னொரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி அவங்க வீட்டுக்கு அனுப்பி வை ஆனால் எப்படி என்னை சொல்லலாம் என்பது போல நீ நா என்று அநாகரிகமாக ஒருமையில் பேசி இருந்தார்.

அம்மாவின் ரியாக்ஷன்

அதிலும் ஒரு இடத்தில் தன்னுடைய அம்மாவின் தலை முடியை கூட யாராலும் பிடுங்க முடியாது என்பதுபோல சைகையயும் காட்டி இருந்தார். அப்போது அந்த பையனின் அம்மா தன்னுடைய மகன் தனக்கு பெரிய பெயரையும், புகழையும் வாங்கி கொடுத்து விட்டான் என்பது போல கண்ட நாய்கள் பேச்சை எல்லாம் எதுக்காக டா இன்னும் பேசிகிட்டு இருக்கிற.. அவங்க அப்படித்தான் கொளைச்சுக்கிட்டு இருக்கும்.. அதுக்காக எல்லாம் நாம கவலைப்பட கூடாது என்பது போல அந்த அம்மாவும் பேச, இந்த ரிலீஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

பெண்ணின் பதிலடி

இதை பார்த்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசிய அதே பெண், இந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, நான் இந்த பையனின் வீடியோவை பார்த்தேன். இதற்கு முன்பு ஒரு வீடியோ போட்டு இருந்தாரு. அதற்கு நான் ரியாக்ட் பண்ணல. ஆனா இப்ப நான் பேசுவதற்கு காரணம் அவரு தரகுறைவாக பேசி இருக்கிறார். ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சியில் அந்த பையன் எனக்கு கிராமத்து பொண்ணு வேண்டாம்... சிட்டி பொண்ணு தான் வேணும்னு அவங்க அம்மாவுக்கு எதிரா பேசினாரு.

“நீ பெண்ணே இல்ல.. ஆம்பள மாதிரி இருக்க!”.. தமிழா தமிழா மேடையில் வெடித்த சர்ச்சை.. அதிர்ந்த ரசிகர்கள்
ஆனா வெளியே வந்த பிறகு அவங்க அம்மாவுக்கு அதிகமான ஹேட்டர்ஸ் வருதுன்னு தெரிஞ்சு அம்மாவுக்கு சப்போர்ட்டாக பேசியிருக்கிறார். அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறது பிரச்சனை கிடையாது ஆனால் இப்படி தரகுறைவா பேசுறது எந்த வகையில் நியாயம்? அம்மாவுக்கு சப்போர்ட் பண்றேன்னு அடுத்தவங்களை அசிங்கமா பேசி இருக்கிறாரு. நீ ஒரு பையன பெத்து அந்த பையனை பொண்ணு வீட்டுக்கு கட்டிக் கொடு என்று சொல்கிறார். எனக்கு ஒரு பையன் பிறந்து அவனுக்கு அதுதான் பிடிச்சிருக்கு என்றால் நான் சந்தோஷமாக அனுப்பி வைப்பேன்.

உங்க அம்மா மாதிரி என் பையனை நான் பெற்று வளர்த்து கஷ்டப்பட்டேன் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என்று கூடவே வைத்து அவங்க சந்தோஷத்தை கெடுக்க மாட்டேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்போ இது தான் விவாதமாக போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு பக்கம் பூண்டு மிளகு குழம்பு சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்துகிறது என்றால் இப்போ தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடந்த விவாதமும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+