பாபர் மசூதி மாதிரியே.. திருப்பரங்குன்றம் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! மமக ஜவாஹிருல்லா வேதனை!
மதுரை: கடந்த 20 ஆம் தேதி திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாபர் மசூதி யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தனக்கு நினைவுபடுத்தியது எனவும், கடந்த முறை நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியோடு நின்றதை போல, தற்போதைய முதல்வர் விஜயும் உறுதியோடு நிற்க வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் மதுரை உலக தமிழ்ச் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், திமுக எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட ஆயிரக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜவாஹிருல்லாஹ்," கடந்த 20 ஆம் தேதி திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கிறது அதனைப் படித்துப் பார்த்தேன். அந்த தீர்ப்பு பாபர் மசூதி யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எனக்கு நினைவுபடுத்தியது.

ஜவாஹிருல்லா
பாபர் மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் இஸ்லாமியர் தரப்பில் கூறப்பட்ட பல்வேறு விவரங்களை நியாயமானது தான் எனக் கூறிவிட்டு கடைசியில் 450 ஆண்டு காலம் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த பாபர் மசூதி ராமர் கோவில் கட்டுவதற்கு ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பை வழங்கினார்கள். அதேபோன்றுதான் இந்த வழக்கிலும் படித்து பார்த்தபோது முக்கியமான செய்தி உள்ளது.
கார்த்திகை தீபம்
அது என்னவென்றால் தீவிர வலதுசாரி இந்துத்துவ சங்பரிவார் அமைப்புகள் சொல்வது போல தர்காவிற்கு மிக அருகில் அருகாமையில் இருக்கும் தூண் உண்மையிலே தீப தூண அந்த தூணில் கார்த்திகை தீபம் அன்று தீபம் ஏற்றப்பட்டது. அந்த மரபு அங்கே கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதை பற்றி எல்லாம் சில செய்திகள் எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் உச்சநீதிமன்றம் நியாயத்தை வழங்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்தையும் கூறிவிட்டு, மலைக்கு மேல் உள்ள தூணிலே தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
திருப்பரங்குன்றம்
கோவில் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு மேலே பாரம்பரியமாக நாங்கள் தீபம் ஏற்றி வருகிறோம் என்று சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஒரு மரபு இருக்கின்றது.
கடந்த ஆட்சியில் உயர்நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது என்ன விளைவு வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் எதற்கும் அடிபணிய மாட்டோம் என திமுக நிமிர்ந்து நின்றார்கள்.
இந்த அரசிடமும் அதனை தான் எதிர்பார்க்கின்றோம்.
மு.க.ஸ்டாலின்
சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்த பிறகு இன்றைக்கு விசாரணைக்கு வர வேண்டும். இரண்டு நீதிபதிகள் அமர வேண்டும். இரண்டு நீதிபதிகளில் ஒருவர் இன்றைக்கு விடுமுறை. வேண்டுமென்றே திட்டமிட்டு சங்பரிவர்களுக்கு ஒத்தாசை வழங்கக் கூடிய வகையில் நீதிமன்றங்கள் செயல்படலாம். ஆனால் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தவெக அரசு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் சொல்கிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக காட்டிய அந்த நிமிர்ந்த நெஞ்சோடு விளைவுகளை சந்திப்போம் என்று சொன்னார்கள்.
உச்ச நீதிமன்றம்
அதேபோல நீங்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறீர்கள். உச்ச நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி கொடுத்து தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல.. அதற்கு பிறகு மறுசீராய்வுமனு போகலாம். இறுதி தீர்ப்பு வரை உச்சிப்பிள்ளையார் கோவிலில் எத்தனை ஆண்டு காலமாக எங்கே தீபம் ஏற்றினீர்களோ? அங்கே தீபம் ஏற்றுங்கள். நாங்கள் தீபம் ஏற்றுவதற்கு எதிரானவர்கள் அல்ல.
நீதிமன்ற தீர்ப்பு
சிவனடியார்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள். கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எதிரானவர்கள் அல்ல. கார்த்திகை தீப வழக்கின் போதும் உச்சிப்பிள்ளையார் கோவில் நிர்வாகம் எங்கு ஏற்றுமோ? அங்கே ஏற்றுங்கள். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தீபத்தை அங்கே ஏற்றுவதற்கு முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் எங்களுடைய கூட்டமைப்பில் உண்டு. ஆனால் மரபை மாற்றாதீர்கள்.. சட்டத்தை உடைக்காதீர்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. இறுதி தீர்ப்பு வரை தொடர்ந்து போராடுவோம். அரசமைப்பு சட்டத்தினுடைய 26வது பிரிவு நிலைநாட்டும் வரை எங்களது போராட்டம் ஓயாது" என்றார்.




Click it and Unblock the Notifications
