எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக அழகிரி மகள் வழக்கு.. சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை அவமதிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி கிளை மேலாளர் பேசியதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்புக் கேமிரா பதிவுகளை பத்திரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை மாத இறுதியில் மு.க அழகிரி மகள் கயல்விழி, எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்தது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்த்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து எஸ்பிஐ வங்கி மேலாளர் தரப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வங்கி அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கயல்விழி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார், சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Kayalvili file petition against SBI Bank Manager Chennai high court order

இந்நிலையில், கயல்விழி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அடையாறு கஸ்தூா்பா நகா் 3-வது பிரதான சாலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில், எஸ்பிஐ வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுதடைந்தது தொடர்பாக கயல்விழியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வங்கிக் கிளை மேலாளர் குரலை உயர்த்தி கத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து, விளக்கம் அளிக்க கடந்த ஜூலை 20 ஆம் தேதி வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷின் சிங்கை சந்திக்க சென்றபோது, அனைவரும் முன்னிலையிலும் தன்னை அவதூறாகவும், அவமரியாதையுடன் திட்டியதாக சாஸ்திரிநகர் போலீசில் கயல்விழி புகார் அளித்திருந்தார். ஆனால் இந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும், கண்காணிப்புக் கேமிரா காட்சிப் பதிவுகளை பத்திரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கயல்விழி அழகிரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி மேலாளர் ஹர்ஷின் சிங்கை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+