கொளத்தூர் இடைத் தேர்தலில் ஸ்டாலினா? அவர் கிட்ட தான் கேட்கனும்! ஒரே வார்த்தையில் முடித்த துரைமுருகன்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: 6 சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கும் நிலையில், இடைத் தேர்தக் தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு.. மீண்டும் கொளத்தூர் தொகுதியில ஸ்டாலின் களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டுமென திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்துத்துப் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் இன்னும் வந்து தமிழக அரசு மௌனம் காத்துக் கொண்டுள்ளது.

காவிரி விவகாரத்தை தமிழக வெற்றிக் கழக அரசு ஏனோ தானோ என்று நினைத்துச் செயல்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனை. இன்றைக்குத் தஞ்சையில் சர்வமும் நாசமாகி சம்பாவும் போய், குறுவையும் போய், எல்லாம் போய் கடன்காரர்களாக இன்றைக்குத் தஞ்சை மாவட்டத்திலே விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Duraimurugan mk Stalin Kolathur By Election

துரைமுருகன்

முதலில் இந்த விவசாயத்தை, இந்த வழக்கினுடைய தத்துவத்தை, இதனுடைய ஆழத்தைப் புரிந்து நடவடிக்கை எடுக்கக்கூடிய அமைச்சர் இருக்க வேண்டும். இதனுடைய ஆழம் எவ்வளவு, இத்தனை ஆண்டு காலம் நடந்திருக்கிறதே, அதில் தொடுக்கப்பட்ட விவகாரங்கள் என்ன என்பதெல்லாம் அமைச்சர் தலைகீழ் பாடமாக வைத்திருக்க வேண்டும். அதெல்லாம் தெரிந்ததாகத் தெரியவில்லையே எனக்கு. ஆகையினால் இன்றைக்குத் தண்ணீர் விடுவது என்பது இமாலயப் பிரச்சனையாகியிருக்கிறது.

காவிரி விவகாரம்

தஞ்சையிலே இன்றைக்குப் பத்திரிகையிலே படம் போட்டு இருக்கிறார்கள், காய்ந்து போன நிலங்களைப் பார்க்க. அதையாவது போய் தஞ்சை தரணியிலே நின்று பார்க்கிற தைரியமாவது இந்த அமைச்சகத்திற்கு இருக்கா என்றால், அதுவும் இல்லை. ஆக என்னைப் பொறுத்தவரையில் திறக்க வேண்டிய நேரத்திலே திறக்காததாலும், திறக்கக் கூடாத நேரத்திலே திறந்ததாலும் இருபுறமும் அடிபட்டு போய்விட்டது.

வெள்ளை அறிக்கை

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் வெள்ளை அறிக்கை விடுகிறார்கள். இதற்கு ஒரு வெள்ளை அறிக்கை வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். தஞ்சாவூரிலே இருக்கிற விவசாயியைக் கேட்டால் கூட இந்த காவிரிப் பிரச்சனையைத் துல்லியமாகச் சொல்லுவான்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய விவகாரத்த்தில் தமிழக அரசு மௌனம் காத்துக் கொண்டு உள்ளது. அதிலிருந்தே தெரிகிறது. அது உண்மையான செய்தின்னு. ஆகையினால அவங்க கொஞ்சம் தயங்குறாங்க அவ்வளவுதான். அந்த விவகாரத்திலேயே அ.தி.மு.க வழக்கறிஞர் ஒருத்தர் வந்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியரிடம் பதிலைப் பெற்று நாளை பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு இல்லை.

கொளத்தூர் இடைத்தேர்தல்

அதிகாரிகளிடையே சட்டமன்ற உறுப்பினர் ஆபாச நிகழ்ச்சியைப் பரிமாறுகிற அல்லது அனுப்புகிற அளவுக்கு ஒழுக்கமும் நாணயமும் கெட்டுப் போயிருக்கிறது. 6 சட்டமன்றத் தொகுதி காலியான தொகுதியா அறிவிச்சிருக்காங்க. தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு, மீண்டும் கொளத்தூர் தொகுதியில ஸ்டாலின் களமிறங்குறதுக்கு வாய்ப்பு இருக்கா? என்றால் மு.க. ஸ்டாலின் கிட்ட தான் கேட்க வேண்டும். அவர்தான் தலைவர். அவர்தான் சொல்ல வேண்டும். அது கட்சியின் முடிவு ஒன்று கூடிதான் எடுக்க முடியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+