Nvidia: ஜென்சன் நியமனத்தால் என்விடியா பங்குகள் தாறுமாறாக உயர்வு.. ஹேப்பி மோடில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்விடியா சி.இ.ஓ மற்றும் தலைவர் பொறுப்பு மீண்டும் ஜென்சன் ஹூவாங்கிற்கே வழங்கப்பட்டுள்ளது. ஜென்சன் ஹூவாங் மீண்டும் என்விடியா சி.இ.ஓவாக நியமனம் செய்யப்பட்டது சரியான முடிவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதே போன்று, என்விடியா பங்குகளும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணி நிலவரப்படி நிவிடியா பங்குகள் 40.56 புள்ளிகள் உயர்ந்து 166.09 புள்ளிகளாக வர்த்தகம் ஆகின. பங்குச் சந்தைகளில் நிவிடியா பங்குகள் உயர தொடங்கியதால் முதலீட்டாளர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

ஜென்சன் ஹூவாங் மீண்டும் என்விடியா தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டதற்கு டிரம்பும் வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

Nvidia shares surge following Jensen appointment US President Trump welcome company decission

சரியான முடிவை எடுத்துள்ளனர்

ஜென்சன் ஹூவாங்கை தலைமை செயல் அதிகாரியாக நியனம் செய்ததன் மூலம் என்விடியா இயக்குநர்கள் குழு சரியான முடிவை எடுத்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அமெரிக்க பொருளாதாரம் செழுமை அடையவும் ஜென்சன் ஹூவாங் என்விடியாவின் தலைமை பொறுப்புக்கு அவசியம். என்விடியா தலைமை பொறுப்புக்கு ஜென்சன் வருவதால் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் என்று நம்புவதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் எந்தக் காரணமும் இல்லை.

தனிப்பட்ட முறையில் ஜென்சனை எனக்கு தெரியும். அவர் தேசபக்தி மிக்கவர். தேசத்தின் சொத்தாக விளங்கியவர். எனினும், அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை என்விடியா நிறுவனம் முறையாகப் பின்பற்றுகிறதா என்பது குறித்து அந்நிறுவனம் விரிவான உள்விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

என்விடியா பங்குகள் கிடுகிடுவென உயர்வு

என்விடியா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் மீண்டும் ஜென்சன் ஹூவாங் நியமனம் செய்யப்பட்ட நிலையில் பங்குச்சந்தைகளில் மீண்டும் நிவிடியா பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன. அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணி நிலவரப்படி நிவிடியா பங்குகள் 40.56 புள்ளிகள் உயர்ந்து 166.09 புள்ளிகளாக வர்த்தகம் ஆகின.

பங்குச்சந்தைகளில் நிவிடியா பங்குகள் உயர தொடங்கியதால் முதலீட்டாளர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். தொடர்ந்து 7 நாட்களாக சரிவை சந்தித்து வந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன. முன்னதாக ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் தலைமை பொறுப்பில் நியமனம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக கோரிக்கை விடுத்து இருந்தார். டிரம்ப் இந்த கோரிக்கை வைத்த 3 நாட்களில் என்விடியா நிறுவனம், ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் சி.இ.ஓ மற்றும் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+