அடிச்சு தூக்குது அதானி ஏர்போர்ட்.. ரூ.2,790 கோடி முதலீடு செய்த 360 ஒன் அசெட்! மொத்தமாய் மாறும் கேம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 360 ஒன் ஆல்ட்டர்நேட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சுமார் 2790 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அதானி ஏர்போர்ட் நிறுவனத்தின் மொத்த பங்கு முதலீட்டு நிதி திரட்டல் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது.

கெளதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் போல்டிங் இந்தியாவில் விமான நிலைய உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Adani

இந்த நிலையில் உலக அளவில் பிரபலமான 360 ஒன் அஸெட் நிறுவனம் தனது நிதிகள் மற்றும் துணை அமைப்புகள் மூலமாக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் புதிதாக வெளியிடப்படும் பங்குகளை வாங்க உள்ளது

இதற்காக சுமார் 2790 கோடி ரூபாய் அதாவது 300 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்கிறது. இந்த முதலீட்டின் அடிப்படையில் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் முதலீட்டுக்கு முந்தைய பங்கு மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலராக நிர்விக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆல்பா வேவ் குளோபல், பிரேம்ஜி இன்வெஸ்ட், டெமாசெக் மற்றும் பிளாக்ராக் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 9825 கோடி முதலீட்டை அதானி நிறுவனம் திரட்டி இருக்கிறது.

தற்போதைய முதலீட்டையும் சேர்த்து அதானி ஏர்போர்ட் நிறுவனத்தின் மொத்த பங்கு முதலீட்டு நிதி திரட்டல் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இந்த பரிவர்த்தைகளை நிறைவடைந்த பிறகு முதலீட்டார்கள் அனைவரும் இணைந்து இந்த நிறுவனத்தில் சுமார் 7.0 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முதலீடு குறித்து பேசி உள்ள அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் செயல் சாராத இயக்குனர் ஜீத் அதானி, அதானி ஏர்போர்ட் நிறுவனத்தின் வளர்ச்சியில் இது மற்றுமொரு முக்கிய மைல் கல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் விமான போக்குவரத்து துறை தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில் நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது இந்தியாவின் விமான போக்குவரத்து வளர்ச்சி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விமான நிலையங்களை வெறும் பயணிகள் வந்து செல்லும் இடங்களாக மட்டும் பார்க்காமல், விமான போக்குவரத்து, வர்த்தகம், பொழுதுபோக்கு மற்றும் பிராந்திய சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான விமான நிலைய நகரங்களாக மாற்றுவதே தங்களது நிறுவனத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சுமார் 96 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட அதானி ஏர்போர்ட் நிறுவனம் தனது பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 200 மில்லியனாக உயர்த்த இலக்கை நிர்ணயத்துள்ளது. இதன் மூலம் தற்போதைய திறனைவிட இரண்டு மடங்கும் அதிகமான வளர்ச்சியையும், இயக்கத்தையும் உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்த நிறுவனத்தின் விமான நிலையங்கள் முழுவதும் நவீன மயமாக்கப்பட உள்ளன. குறிப்பாக விமான நிலையங்களை சுற்றி அதானி ஏர்போர்ட் சிட்டிகளை உருவாக்கும் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு சர்வதேச தரத்திலான விமான நிலைய வசதிகளுடன், வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வர்த்தக வசதிகளும் செய்யப்பட இருக்கின்றன.

பயணிகளுக்கான சேவையை மேம்படுத்துவதுடன் விமான போக்குவரத்து அல்லாத பிற வர்த்தக நடவடிக்கைகளையும் விரிவுபடுத்த அதானி ஏர்போர்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு வருவாயையும் அதிகாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதானி ஏர்போர்ட் நிறுவனம் 8 விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது. அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் படி இந்தியாவின் மொத்த விமான பயணிகள் போக்குவரத்தில் 23 சதவீதத்திற்கு அதிகமான பயணிகளுக்கு இந்த விமான நிலையங்கள் சேவைகளை வழங்குகின்றன. விமான போக்குவரத்து சேவைகள் மட்டுமல்லாது பயணிகளுக்கான இதர வசதிகள் மற்றும் விமான நிலைய நகரங்கள் உருவாக்கும் என பல்வேறு துறைகளில் அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்கனவே பல முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களின் ஆதரவை பெற்றுள்ள அதானி ஏர்போர்ட், தற்போது 360 ஒன் அசெட் நிறுவனத்தின் முதலீட்டையும் பெற்றிருக்கும் நிலையில் விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கல் திட்டங்களுக்கு இந்த முதலீடு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+