திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 25ஆம் தேதி காலை 10 மணி வரை தடை! 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மலையில் தீபம் ஏற்றப்படுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் அப்பகுதியில் 5000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல 25-ம் தேதி காலை 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

Thiruparankundram

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நவம்பர் 23ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, நவம்பர் 23ஆம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

இதன்படி, மதுரை மாவட்ட எல்லைக்குள் பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும், திருப்பரங்குன்றம் மலை மீது பொதுமக்கள் ஏறிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் ஆதரவாகவும் எதிராகவும் திரளக்கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள், விளையாட்டுப் போட்டிகளுக்காக நடைபெறும் நிகழ்ச்சிகள், திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெறும் வழக்கமான சடங்குகள் மற்றும் திருவிழா நிகழ்வுகள், சட்டப்பூர்வ அதிகாரத்தின் கீழ் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள், மாநில அல்லது மத்திய அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான உத்தரவுகளைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கும், மலையில் வழக்கமாக நடைபெறும் மத வழிபாடுகள் மற்றும் தர்கா உள்ளிட்ட பிற வழிபாட்டுத் தலங்களின் சட்டப்பூர்வ வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும், காவல்துறையின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நவம்பர் 23ஆம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என்றும், அதற்கு முன்பாக உத்தரவு திரும்பப் பெறப்படாவிட்டால் குறிப்பிட்ட காலம் வரை தொடரும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+