வேண்டாம்.. விளையாடாதீங்க விஜய் சார்! முருகனே தண்டனை கொடுப்பார்! வானதி சீனிவாசன் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது எனவும், திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் பக்தர்களின் நம்பிக்கையோடும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையோடும் தமிழக அரசு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக பாஜகவின் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி," நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு, அவற்றைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு முறையும் புதுப்புது காரணங்களை உருவாக்கி திசைதிருப்ப முயற்சிப்பது ஏன்?

Vanathi Srinivasan Vijay Thiruparankundram Karthigai Deepam

தமிழகம் முழுவதும் 800 நில அளவை இடங்களில் அடையாளம் காணப்பட்ட கற்களில், திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட பகுதிகளில் 484 இடங்களில் சர்வே கற்கள் இருப்பதாகத் தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இல்லாத அக்கறை, நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டிய நேரத்தில் மட்டும் தமிழக அரசுக்கு எங்கிருந்து வந்தது?

இது நிர்வாக நடவடிக்கையா? அல்லது நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் இருப்பதற்காக உருவாக்கப்படும் மற்றொரு தடையா? உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்துவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய அரசே, நீதிமன்ற உத்தரவுகளைச் சுற்றி வளைத்துச் செயல்படுவது ஜனநாயகத்திற்கும் நீதித்துறைக்கும் விடப்படும் சவாலாகும்.

கடந்த கால திமுக ஆட்சியில் இந்து மக்களின் மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல், நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மதிக்காத போக்கு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. அதன் அரசியல் விளைவுகளை மக்கள் ஏற்கனவே உணர்த்தியுள்ளனர். இப்போது அதே பாதையில் தவெக அரசும் பயணிக்கத் துணிவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் பக்தர்களின் நம்பிக்கையோடும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையோடும் தமிழக அரசு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து, சட்டப்படி தீபம் ஏற்றுவதற்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தாமல் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக மத நம்பிக்கைகளைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். அப்படி நம்பிக்கையைச் சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு முருகப்பெருமானே உரிய பாடம் புகட்டுவார்!" எனக் கூறியுல்லார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+