ராகு கேது பெயர்ச்சி: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. ஒன்றரை ஆண்டுகள் கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது கும்ப ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டம் அற்புதமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடமாக மருத்துவமனை, மருத்துவர், அறுவை சிகிச்சை என பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். பெரிய பாதிப்புகள், சிக்கல்கள், அவதி, அவஸ்தையில் இருந்து வெளியில் வந்திருப்பீர்கள். மனம் சமநிலையற்ற தன்மையில் இருந்திருக்கும்.

rahu-ketu-peyarchi-2026-massive-career-growth-financial-gains-for-kumbam-rasi

விடுதலை

இப்போது இந்த ராகு பெயர்ச்சி காலகட்டத்தில் அந்தப் பிரச்சனைகளில் இருந்து எல்லாம் விமோர்சனம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். இடமாற்றம் ஏற்படும். அயல்நாட்டில் செட்டிலாகக்கூடிய யோகம் ஏற்படும். சேலத்தை தாண்டி இடமாற்றம் வரலாம். சிலருக்கு யூரோப் நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய அமைப்பு ஏற்படும். 100 சதவீதம் இடமாற்றம் செய்து செட்டிலாகக்கூடிய யோகம் ஏற்படும்.

டும் டும் டும்

திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணமாவது, லைஃப் செட்டிலாவது போன்ற அமைப்பு உண்டாகும். புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். கோர்ட், கேஸ் என அனைத்தும் உங்களை விட்டு விலகும் அமைப்பு உள்ளது. பெரிய வெற்றியைக் காணக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில்

தொழில் ஸ்தானத்தில் கேது வருவதால் இப்போது இருக்கிற துறை, கோர்ஸ் போன்றவை மாறும். இருக்கின்ற வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறுவது, டீம் மாறுவது, புரோஜெக்ட் மாறுவது போன்ற யோகம் உண்டாகும். அல்லது யார் புரோஜெக்ட் கொடுக்கிறார்களோ அவர்கள் நிறுவனத்திற்கே நேரடியாக வேலைக்கு சேருவீர்கள். சட்ட வல்லுநர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். எல்லா வழக்குகளிலும் வெற்றி பெறும் அமைப்பு ஏற்படும்.

முன்னேற்றம்

பெரிய மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். விரயத்தில் ராகு அமர்ந்திருப்பதால் கணவன், மனைவிக்குள் சண்டைகள் அதிகரிக்கும். கணவனாக இருந்தால் மனைவி, மனைவியாக இருந்தால் கணவரின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. வயிற்றுக்குள் பிரச்சனை, அல்சர், வயிறு வலி போன்றவை வரும் அமைப்பு உள்ளது. உணவில் புளியை குறைத்துக் கொள்வது நல்லது.

பொருளாதார ஏற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம், போட்டியில் ஜெயிப்பது, பெரும் மாற்றத்தை உருவாக்கு போன்றவை இந்த ராகு பெயர்ச்சியில் ஏற்படும். மெடிக்கல் லேப் போன்றவை ஆரம்பிக்க நல்ல காலகட்டம். அரசு உதவிபெறும் நிறுவனத்தில் அமரும் அமைப்பு. கல்லூரியில் நல்ல சீட் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் ஜெயிப்பீர்கள். இரவு நேரத்தில் பயணத்தில் கவனம், வெளியூர் முதலீட்டில் கவனம் தேவை. சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+