ஒன்னா இருந்தது தெரிஞ்சு போச்சு ஃபாதர்.. பாதிரியார் வீட்டை பதம் பார்த்த உறவினர்கள்! பரபர தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே க கப்பலில் வேலை பார்த்தவரின் மனைவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் மீது புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதிரியாரின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தியதாக பெண்ணின் உறவினர்கள், ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் இன்னோக். கப்பலில் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வமாதா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.

Priest

தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் கப்பல் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்ற இன்னோக், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார். ஊர் திரும்பிய அவருக்குத் தனது காதல் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மனைவியின் செல்போனை அவர் ஆய்வு செய்தபோது, செல்வமாதா ஆலயப் பாதிரியாருடன் அவர் நெருங்கிய உறவில் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மனைவியிடம் கேட்டபோது அவரும் அதனை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, தான் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், பாதிரியார் தனது மனைவியிடம் ஆசைவார்த்தை கூறிப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் பாதிரியாரின் ஆதரவாளர்கள் தனது வீட்டிற்கு வந்து பொருட்களைச் சேதப்படுத்திச் சூறையாடியதாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்னோக் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், மனைவியிடம் அத்துமீறியதால் ஆத்திரமடைந்த இன்னோக், அவரது தந்தை செல்டன் மற்றும் நண்பர்கள் பிரேம், ஜெயக்குமார், பீர் ஆகிய 5 பேரும் பாதிரியார் பங்களாவிற்குச் சென்று கதவை உடைத்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிங்கித்துறை ஊர் நலத்தலைவர் தேவதாஸ், பாதிரியார் பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்து கட்டையால் கதவை உடைத்துப் பாதிரியாரை அவதூறாகப் பேசினர் எனப் பாதிரியார் தரப்பில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில் இன்னோக், செல்டன், பிரேம், ஜெயக்குமார், பீர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+