வீணாகப் போகும் விஜய்! இந்துக்களுக்கு மட்டுமில்ல.. இந்திய அரசியலமைப்புக்கே துரோகம்! நயினார் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களுக்கு துரோகம் இழைக்க வில்லை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே துரோகம் இழைத்துள்ளது எனவும் இந்த விவகாரத்தில் முதல்வருக்கு பக்குவம் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சில அரசியல் கட்சியினுடைய சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு முதலமைச்சர் வீணாகப் போகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி 25 வருடம் மக்கள் பணியில் இருப்பதையொட்டி பாராட்டு விழா மற்றும் அவரது சிறப்பை கூறும் மாநில அளவிலான பயிற்சி முகாம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சரும் தேசிய பொது குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய துணை தலைவரும் கர்நாடக எம் பி யுமான நாகராஜ், தமிழக பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Nainar Nagendran

நயினார் நாகேந்திரன்

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்," நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த விஷயம் இந்துக்களுக்கு எதிரான விஷயம் மட்டுமல்ல இது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. புறம்பானது. என்னைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு மெச்சூரிட்டி இல்லையோ என்று என்னுடைய எண்ணமாக கணிப்பாக உள்ளது.

விஜய் அரசு

அவருக்கு பெருந்தன்மை இல்லையோ அல்லது ஒரு முதலமைச்சராக எல்லாரையும் ஒரே மனப்பான்மையா பார்க்கக்கூடிய மனப்பக்குவம் இல்லையோ? ஏதோ ஒரு சில அரசியல் கட்சியினுடைய சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு முதலமைச்சர் வீணாகப் போகிறார் என்று நான் நினைக்கிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர், துணை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக. இது பதில் சொல்லியே தீர வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுகு மாறாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு சாதாரண விஷயமாக நடந்து முடிந்திடாது. இதனுடைய விளைவுகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கை உச்சநீதிமன்றத்திற்கு எதிரான போக்கினுடைய விளைவுகளை சட்ட ரீதியாக தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தே தீருவார்.

அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் பொறுத்தவரை நான் ஒரு மாசத்துக்கு முந்தியே கூறிய போது யாரும் கேட்க வில்லை. ஆனால், இப்போது உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொண்டு சொன்ன பிறகு தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகையினால் தான் முதலில் கூறியது தான் தற்போது நடந்து வருகிறது. அருள் விக்னேஷ் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+