திருப்பரங்குன்றம் விவகாரம்.. எந்த கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை! ஸ்தானிக பட்டர்கள் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருகன் கோவிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானிக பட்டர்கள் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஸ்தானிகர்கள் கருத்து அடிப்படையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற அறங்காவலர்கள் குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தற்போது ஸ்தானிக பட்டர்கள் ஆட்சேபம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் அறங்காவலர்கள் குழு நிறைவேற்றியதாக கூறப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்தானிக பட்டர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவது பற்றி எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்க்கு வழங்கவில்லை என்று ஸ்தானிக பட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானிக பட்டர்கள்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

Thiruparankundram

மிகவும் மனவேதனையை தருகிறது

அருள்மிகு ஆண்டவர் சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் நிர்வாக அதிகாரி / துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர்கள் அவர்களுக்கு இத்திருக்கோயில் ஸ்தானிக பட்டர்கள் எழுதிக் கொண்டது, நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஓர் கடிதத்தை நமது திருக்கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம்.

நாங்கள் இத்திருக்கோவிலில் நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அழித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்;

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தெரிவித்து ஐகோர்ட் உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீப தினத்தன்று மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. எனினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆகம விதிப்படியே தீபம் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

மதுரை ஆட்சியர் விளக்கம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று இவ்விவகாரம் தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. மதுரை ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியதாவது:- தூண் இருக்கும் பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோவில் அறங்காவலர் குழுவிடம் தெரிவித்தோம். மாவட்ட நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

ஆனால் கோவிலின் அறங்காவலர் குழு, வழக்கமாக விளக்கேற்றப்படும் இடத்திலேயே தொடர்ந்து விளக்கேற்ற ஒருமனதாக தீர்மானித்தது. இது குறித்து தேவஸ்தானம் தரப்பில் இருந்து கலெக்டரிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மலை மீதுள்ள தூணில் விளக்கேற்றுங்கள் என்று கோவில் அறங்காவலர் குழுவிடம் வலியுறுத்த எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, தூணில் தீபத்தை ஏற்ற முடியவில்லை. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+