திருப்பரங்குன்றம் தீபம்.. உச்சநீதிமன்ற ஆர்டர் அமல்படுத்தப்பட்டதா? CM விஜயிடம் அறிக்கை கேட்ட ஆளுநர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? என்பது குறித்து தமிழக முதல்வர் விஜய்யிடம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. நேற்று இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருந்தது.

Tamil Nadu Governor

இதனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்த நிலையில் திருப்பரங்குன்றத்தை சுற்றி எஸ்பி அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் 12 பேர் தலைமையில் சுமார் 5600 போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் கடந்தாண்டை போலவே இந்த ஆண்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள கொப்பரையில் தான் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்து இருந்த இந்து அமைப்புகளை சேர்ந்த பலரும் கோபத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிலையில் அதற்கும் அனுமதிக்க கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என இந்து முன்னணி காடேஸ்வர சுப்பிரமணியம் மற்றும் வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாதன் உள்ளிட்டோர் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில் அதில் அரசியல் சாசன பிரிவின் கீழ் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் இடம் அறிக்கை கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இது மட்டும் அல்லாமல் அரசியல் சாசன 144 பிரிவின் படி தமிழ்நாடு அரசின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற ஒத்துழைப்பிற்கு வேண்டும் என்ற விதியும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய்யிடம் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? என்பது தொடர்பாக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் அறிக்கை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+