ராகுல் காந்தி வரவில்லை போலயே.. நாளை முதல் 2 நாட்கள் நடக்கும் கல்வி விருது விழா.. தவெக அறிவிப்பு!
சென்னை: தவெக சார்பாக நடத்தப்படும் கல்வி விருது விழாவின் 2 மற்றும் 3ஆம் கட்ட நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை நீலாங்கரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் சேலம், கோவை, ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
தவெக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, இம்முறை 3வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே முதல் கட்டமாக நவம்பர் 4ஆம் தேதி கல்வி விருது விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 2வது கட்ட கல்வி விருது விழா நவம்பர் 20ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன் கல்வி விருது விழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தவெகவின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் விஜய் தரப்பில் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
விஜய் - ராகுல் காந்தி இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க காங்கிரஸ் கட்சி சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது. அதனால் கல்வி விருது விழாவுக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தவெக கல்வி விருது விழாவின் 2 மற்றும் 3ஆம் கட்ட நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் சேலம், கோவை, ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொள்ள உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மாலை வரை நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
ஆனால் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது சந்தேகம் தான். தமிழக காங்கிரஸ் கட்சி தரப்பிலோ, தவெக தரப்பிலோ ராகுல் காந்தி பங்கேற்பு குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் ராகுல் காந்தி மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
