கார்த்திகை தீபம்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வு ஏன் நடைபெறுகிறது தெரியுமா?

தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

spirituality karthigai deepam tiruchendur

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. மேலும் காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.

spirituality karthigai deepam tiruchendur

பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கோவில் முன்புள்ள கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 25 அடி உயர சொக்கப்பனை முன்பு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதைத் தொடர்ந்து சொக்கப்பனை மேல் ஏறி நின்று சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதன்பின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதை காண்பதற்காக திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

spirituality karthigai deepam tiruchendur

சொக்கபனையை கண்டதும் பக்தர்கள் "முருகனுக்கு ஆரோகரா கந்தனுக்கு அரோகரா" என்று கோஷமிட்டனர். தொடர்ந்து சண்முக விலாச மண்டபத்தில் இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி தெய்வானை அம்பாலுடன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்தார்.

spirituality karthigai deepam tiruchendur

சொக்கப்பனை கொளுத்துதல் என்றார் என்ன என்பதை பார்க்கலாம். பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது சிவன் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக நின்றார். அந்த நிகழ்வை நினைவுக்கூரும் வகையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+