கொங்கு பெல்டில் கலக்கல்! ஒரே நாளில் போதை வழக்கு குற்றவாளிகளை அலற வைத்த சிருஷ்டி சிங் IPS! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிருஷ்டி சிங் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட சிருஷ்டி சிங், 1993 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அறிவியலில் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார்.

kallakurichi shrisiti singh

அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார். மத்திய அரசு தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் சிருஷ்டி கடினமாக உழைத்து இந்திய அளவில் 180-ஆவது ரேங்க் பெற்று சாதனை படைத்திருந்தார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஎஸ் பணியில் இணைந்தார். தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது துடிப்பான செயல்பாடுகளால் குறுகிய காலத்திலேயே முக்கிய பதவிகளை பெற்றார்.

கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஏஎஸ்பியாக இருந்து களப்பணியை தொடங்கினார். அப்போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் குற்றச்செயல்களை ஒடுக்குவதிலும் சிறப்பாக செயல்பட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தார்.

பின்னர் திருச்சி மாநகர தெற்கு பகுதி காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 ஜூன் மாதம் தமிழக அரசு மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின் போது திருப்பூர் மாவட்டத்தின் 14ஆவது எஸ்பியாக பொறுப்பேற்றார்.

திருப்பூரை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் அண்மையில் ஒரே நாளில் 92 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி போதை பொருள் வழக்கில் தொடர்புடைய பலரை கைது செய்து அதிரடி காட்டினார். காங்கேயத்தில் முக்கிய பகுதிகளில் போலீஸாருடன் சேர்ந்து சிருஷ்டியும் ரோந்து பணிக்கு சென்று பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல் வசிக்கும் வகையில் செயல்பட்டார். அது போல் இவர் சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். இவர் துடிப்பான அதிகாரி மட்டுமில்லாமல் நேர்மையான அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ளன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் "ஆபாச மெசேஜ் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் அறிக்கை கோரியுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண் ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூகவலைதளங்களில் சிலர் மோசமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக டிஜிட்டல் ஆதாரங்களைப் பத்திரப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், "தலைமைச் செயலாளர், தூய்மைப் பணியாளர், ஆட்சியர் என யாராக இருந்தாலும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான புகார் குறித்து மாநில அளவில் குழுக்கள் இல்லை, ஏன் அமைக்கவில்லை, வழக்கில் புலன் விசாரணை அதிகாரி யார்" என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் நீதிபதி, "யாரையாவது காப்பாற்ற அரசு முயற்சிப்பது தெரிந்தால் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை" என்றார். அதற்கு காவல் துறை தரப்பில், "தமிழக அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை" என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி வழக்கை புலன் விசாரணை செய்யும் அதிகாரியாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங், விசாரணையை கண்காணிக்கும் அதிகாரியாக நிர்வாக ஐஜி காமினியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழக அரசு, நீதிபதி லட்சுமி நாராயணனிடம் தகவல் தெரிவித்தனர். சிருஷ்டி விசாரணையை தொடங்கும் நிலையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+