அடுத்த 15 நாட்களுக்கு.. வினாடிக்கு 2000 கன அடி நீர் திறக்க.. காவிரி மேலாண்மை குழு உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போதுமான நீர் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும் சம்பா-தாளடி பயிர்கள் கருகி வருகின்றன. இந்த சூழலில் தான் இன்று காவிரி மேலாண்மை குழு கூட்டம் இன்று கூடியது. அதில் வினாடிக்கு 2000 கனஅடி விதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2000 கனஅடி நீர திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இன்று பிற்பகல், ஆணையத்ததின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் ஆணையத்தின் 62வது கூட்டம் நடைபெறுகிறது.

Cauvery Management Authority Cauvery Tamil Nadu

முன்னதாக கடந்த நவம்பர் 6ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவின்படி கர்நாடகா, தமிழகத்திற்கு தினமும் 1,500 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவின் படி 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் என் செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஜூன் 1ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்.. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 151.628 டிஎம்சி நீரில் 58.186 டிஎம்சி நீரை மட்டுமே திறந்து விட்டுள்ளதாகவும் 93.442 டி எம் சி நீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டி இருக்கிறது.

இது குறித்து இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். முன்னதாக கடந்த நவம்பர் 20ஆம் தேதி கூடிய காவிரி நீர் ஒழுங்காற்று குழு, நவம்பர் 21 முதல் 16 நாட்களுக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட பரிந்துரைத்தது.

ஆனால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்று கூறி.. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் இந்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை காவிரி நீர் ஆணையம் கட்டாய உத்தரவாக பிறப்பித்து, கர்நாடகாவில் தண்ணீர் திறக்க செய்ய வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் தேவைப்படுவதையும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டி.. கர்நாடகா அணைகளில் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு உரிய பங்கை பெற்று தர வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் கேட்க இருக்கின்றனர்.

தற்போது மேட்டூர் அணையில் 25.71 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இது அணையின் மொத்த கொள்ளளவில் 27.5 சதவீதம் மட்டுமே ஆகும். அணைக்கு வினாடிக்கு 598 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையில் நீர் மட்டும் 113 அடியாகவும் நீர் இருப்பு 83.53 டிஎம்சி ஆகவும் இருந்தது. இப்போது அணையின் நீர் மட்டம் 61.36 அடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தான் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2000 கனஅடி நீர திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2000 கனஅடி விதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+