அனிருத் ரிசப்ஷனில் சூர்யா குடும்பம் கலந்து கொள்ளாத காரணம் இதுதானா? மும்பையில் இருந்தும் போகலையா?
சென்னை: அனிருத் காவ்யா மாறன் திருமண வரவேற்பு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரசியல் தலைவர்கள், சூப்பர் ஸ்டார்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என ஏகப்பட்ட பேர் வந்து புதுமண தம்பதியை வாழ்த்தினார்கள். ஆனால் இவ்வளவு பிரபலங்கள் வந்த ஒரு திருமண வரவேற்பில் யாரெல்லாம் வரவில்லை என்பதைத்தான் ரசிகர்கள் இப்போது உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
அதில் குறிப்பாக தனுஷ் வராதது ஏற்கனவே பெரிய விவாதம் ஆகிக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானது, தனுஷ் படத்தின் மூலமாக தான். இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள், படங்கள் என இவர்களுடைய நட்பையும் கூட்டணியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறைத்து விட முடியாது. அப்படிப்பட்ட தனுஷ் இந்த திருமண வரவேற்பில் இல்லாதது பல கேள்விகளை எழுப்பியது.

கலந்து கொள்ளாத சூர்யா
அதேபோல சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தினர் வராததும் பேசப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் கூட மனைவியோடு இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனால் சூர்யா, ஜோதிகா இருவரும் அனிருத் வட்டாரத்தில் நெருக்கமான சினிமா பிரபலங்கள், குறிப்பாக சூர்யா படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது திருமண வரவேற்பில் சூர்யா குடும்பம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அழைப்பிதழ் பிரச்சனை
இதற்கு இடையே சூர்யா தற்போது மும்பையில் இருப்பதாகவும், அவருக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்பதால் தான் அவர் வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது மற்ற பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தது போல சூர்யா குடும்பத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை, அதனால் தான் அவர்கள் இந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் பேச்சு கிளம்பி இருக்கிறது.
விளக்கம் வரவில்லை
ஆனால் இதுவரை சூர்யா அல்லது அனிருத் தரப்பில் இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்ற தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ரசிகர்கள் மட்டும் இதை வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தனுஷ் வராதது ஒரு பக்கம் பேசுபொருளாகி இருக்கிறது, அதேபோல அவருடைய முன்னாள் மனைவியான ஐஸ்வர்யாவும் ரிசப்ஷனில் கலந்து கொள்ளவில்லை.
ஐஸ்வர்யாவும் கலந்து கொள்ளவில்லை
அனிருத்தின் திருமணத்திற்கு தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் உடன் கிரீஸ்க்கு போயிருந்தார். ஆனால் வரவேற்பு 2 நாள் பிரமாண்டமாக நடந்தாலும் அதில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லையே! அது எதற்காக? என்ற கேள்விகளும் இருந்தது. ஒரு சிலர் இதையும் தனுஷ் உடன் தொடர்பு படுத்த தொடங்கிவிட்டனர். தனுஷை இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லை என்பதால் தான் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். திருமண வரவேற்பில் யார் வந்தார்கள் என்பதைவிட, யார் வரவில்லை? அவர்களுக்கு அழைப்பு போனதா, இல்லையா? என்பது தான் இப்போ கோலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
