உ.பி தேர்தல்.. காங்கிரசை வைக்க வேண்டிய இடத்தில் வைத்த அகிலேஷ் யாதவ்.. தரமான முடிவு! நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.

ஆனால், பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எடுத்த அதிரடி முடிவு, காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Uttar Pradesh Assembly Elections Uttar Pradesh Assembly Elections 2027 uttar pradesh

131 தொகுதிகளுக்கு 26 மட்டுமே ஆஃபர்!

டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சி முதலில் 181 தொகுதிகள் வரை விருப்பப்பட்டியல் வைத்ததாகவும், பின்னர் சுமார் 130 முதல் 131 தொகுதிகளைக் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொடுத்த பதில் காங்கிரஸுக்குப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. உங்களுக்கு 26 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என சமாஜ்வாதி கட்சித் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய கோட்டைகளான அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், வெறும் ஒரே ஒரு சீட்டை மட்டுமே சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தலைவர்கள், 403 தொகுதிகளில் வெறும் 26 சீட்டுகளா? இது மிகவும் கோபத்தை ஏற்படுத்துகிறது என வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் தனது கோரிக்கையை 120 இடங்களாகக் குறைத்தாலும், அகிலேஷ் யாதவ் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

5 வேட்பாளர்களை அறிவித்து அகிலேஷ் கொடுத்த ஷாக்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் இழுபறியில் இருக்கும்போதே, நேற்று யாரும் எதிர்பாராத விதமாக 5 தொகுதிகளுக்கான சமாஜ்வாதி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார். இதில் உமர் அலி கான் (பெஹத்), ஆஷு மாலிக் (சஹாரன்பூர்), நஹித் ஹசன் (கைரானா), மெஹபூப் அலி (அம்ரோஹா) மற்றும் ஜோதி லோதி (லலித்பூர்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பெஹத் மற்றும் சஹாரன்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி தனக்கு வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சஹாரன்பூர் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், நாங்கள் யாரிடமும் பிச்சை கேட்கவில்லை எனக் கொந்தளித்துள்ளார்.

அகிலேஷுக்குப் போன எச்சரிக்கை - கடந்த காலப் பாடங்கள்!

அகிலேஷ் யாதவ் காங்கிரஸுக்கு இவ்வளவு குறைவான இடங்களை ஒதுக்கி, 'இருக்க வேண்டிய இடத்தில் வைத்ததற்கு' பின்னால் ஒரு முக்கியமான அரசியல் கணக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால், அவர்களால் அங்கு வெற்றி பெற முடியாது; மாறாக, கூட்டணியின் வெற்றியைக் கெடுத்து மறைமுகமாக பாஜக வெற்றி பெறவே அது வழிவகுக்கும் என அகிலேஷ் யாதவுக்கு அரசியல் வியூக வகுப்பாளர்கள் மற்றும் கட்சி மூத்த தலைவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மற்ற மாநிலத் தேர்தல்களே சாட்சியாக உள்ளன:

2017 உ.பி. சட்டமன்றத் தேர்தல்: இதே சமாஜ்வாதி கட்சி, அப்போது காங்கிரஸுக்கு 105 தொகுதிகளை வாரி வழங்கியது. ஆனால் காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணி படுதோல்வி அடைந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது.

2020 பீகார் தேர்தல்: ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சி, காங்கிரஸுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றதால், தேஜஸ்வி யாதவால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போய், பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா: சமீபத்திய தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸின் மோசமான செயல்பாடு, ஒட்டுமொத்த கூட்டணியின் தோல்விக்கும் பாஜகவின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

வெற்றி வாய்ப்பு மட்டுமே முக்கியம்!

இந்தப் கசப்பான அனுபவங்களை மனதில் வைத்தே, எண்ணிக்கையை விட வெற்றி வாய்ப்பு மட்டுமே முக்கியம் என அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2022 தேர்தலில் காங்கிரஸ் வென்ற 2 தொகுதிகள், இரண்டாம் இடம் பிடித்த 4 தொகுதிகள் மற்றும் சமாஜ்வாதி கட்சி பலமாக உள்ள 20 தொகுதிகள் எனத் துல்லியமாகக் கணக்கிட்டு இந்த 26 இடங்களை அகிலேஷ் கொடுத்துள்ளார். மதவாத பாஜகவை வீழ்த்த கிடைத்திருக்கும் இந்த வரலாற்று வாய்ப்பைத் தவறவிடக் கூடாது.. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டும் அடையாளம் காட்டுங்கள்.. என காங்கிரஸுக்கு அகிலேஷ் யாதவ் மறைமுகமாகக் கடிவாளம் போட்டுள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 27-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், அகிலேஷின் இந்த அதிரடிக்கு காங்கிரஸ் பணியுமா அல்லது கூட்டணியில் விரிசல் விழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+