கள்ளக்குறிச்சி தவெக MLA வழக்கை விசாரிக்கும் எஸ்.பி சிருஷ்டி சிங், ஐஜி காமினி யார்? சுவாரசிய பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விசாரணையைச் சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜி என். காமினி ஐ.பி.எஸ். நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் சிக்கியுள்ள இந்த முக்கியமான வழக்கை விசாரிக்கக் களமிறக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்துப் பார்ப்போம்.

Kallakurichi Tiruppur

திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் ஐ.பி.எஸ்.

காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான சிருஷ்டி சிங், 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாவார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த இவர், 1993-ஆம் ஆண்டு பிறந்தவர். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சிருஷ்டி சிங், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். எனவே, தமிழ்நாட்டுச் சூழலும் மொழியும் இவருக்கு நன்கு பரிச்சயமானது.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 180-வது இடத்தைப் பிடித்து ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார்.

பயிற்சிக்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பதவி உயர்வு பெற்று தற்போத திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றி வருகிறார். எவ்வித அரசியல் அழுத்தத்திற்கும் அஞ்சாமல் நேர்மையாகவும் வேகமாகவும் விசாரணை நடத்துவார் என்ற நற்பெயரைப் பெற்றவர்.

ஐஜி என். காமினி ஐ.பி.எஸ்.

இந்த வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள என். காமினி, தமிழ்நாடு காவல்துறையில் சுமார் 29 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அனுபவம் கொண்ட மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாவார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த என். காமினி, 1997-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப்-1 தேர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளராக (DSP) தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். சேலம் மற்றும் விருத்தாச்சலம் உட்கோட்டங்களில் டிஎஸ்பி-யாகவும், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவில் கூடுதல் எஸ்.பி-யாகவும் பணியாற்றினார்.

2004-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற இவர், ராமநாதபுரம், வேலூர் மற்றும் மதுரை சரகங்களில் டிஐஜி-யாகப் (DIG) பணியாற்றிச் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருந்தார்.

2022-ஆம் ஆண்டு ஐஜி-யாகப் பதவி உயர்வு பெற்ற காமினி, குற்றப்பிரிவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி (Civil Supplies CID) ஐஜி-யாகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றிய இவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார். சமீபத்தில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜி-யாக நியமிக்கப்பட்டார். இவரது சிறப்பான பணியைப் பாராட்டி 2017-இல் முதலமைச்சர் பதக்கமும், 2019-இல் குடியரசுத் தலைவர் காவல் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதாலும், குற்றம் சாட்டப்பட்டவர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்பதாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி உண்மைகளை வெளிக்கொண்டு வர இந்த இரண்டு அனுபவமிக்க மற்றும் நேர்மையான பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கைகளில் வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+