காவிரி-குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்கணும்! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா கூடுதல் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி உபரி நீரை தமிழ்நாடு தன்னிச்சையாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க கூடாது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது

பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தின் போது உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்த உபரி நீரைப் பயன்படுத்தும் விதமாக காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், கர்நாடக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரச தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் மனு கர்நாடக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Cauvery Vaigai Gundaru Interconnection Project

கர்நாடக அரசு தாக்கல் செய்த கூடுதல் மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக்கொள்ள உரிமை இல்லை. எனவே காவிரி - குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது. அதுமட்டுமின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு நீர் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த விடக்கூடாது. காவிரியில் பங்கீடு செய்யப்பட்ட மொத்த நீருக்கு மேல், இரு மாநில எல்லையான பிலிகுண்டுவில் உள்ள நீரானது, கர்நாடகாவுக்கு உரிமையானது என்று முன்பே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, கர்நாடகத்திற்கான நீரை மடைமாற்றி சேகரிக்கும் விதமாக அமையவிருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும். மேட்டூரில் இருந்து உபரி நீர் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேகரிக்கும் சரபங்கா திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி புது கட்டளை நீர் பாசன திட்டம், ஆதனூரில் கொள்ளிடத்து குறுக்கே தடுப்பணை கட்ட தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த நிரந்தர தடையை விதிக்க வேண்டும். காவிரி உபரி நீரை சேகரிக்கும் விதமாக மேகூறிய நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில் இந்த நதிகள் இணைப்பின் முதல் கட்டமாக காவிரி - வெள்ளாறு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில், இந்த திட்டம் சட்டவிரோதமானது.

எனவே, இதனை நிறுத்த வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்க வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி எதுவும் வழங்க முடியாதபடி தடை விதிக்க வேண்டும். காவிரி நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது போக உபரியாக காவிரி படுகையில் மீதமுள்ள நீரை கர்நாடகாவின் பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாகக் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருக்கும் கூடுதல் மனு டிசம்பர் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடகா, தமிழக அரசு மேற்கொள்ளும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிரந்தர தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நீர்பங்கீடு விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+