பிரம்மபுத்திராவை மறித்து சீனா கட்டும் உலகின் மிக பெரிய அணை! சாட்டிலைட் படங்களால் வெளியான உண்மை

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பிரம்மபுத்திரா நதியை மறித்து சீனா தனது பகுதியில் கட்ட திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட அணைக்கான பணிகள் வேகமெடுத்து வருவதாக புதிய சாட்டிலைட் படங்கள் தெரிவிக்கின்றன. 60,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த திட்டத்துக்காக, பல இடங்களில் புதிய சாலைகள் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

நமது நாட்டின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பிரம்மபுத்திரா நதி. இது சீனாவில் தொடங்கி, இந்தியா வழியாக வங்கதேசம் சென்று கடலில் கலக்கிறது. இந்த நதியில் தான் சீனா தனது பகுதியில் மெடாக் என்ற பெரிய அணையை கட்ட திட்டமிட்டது. இது உலகிலேயே மிக பெரிய அணையாக இருக்கும் என சொல்லப்பட்டது.

World biggest dam in China

சாட்டிலைட் படங்கள்

இந்த சூழலில் தான் சத்தமே இல்லாமல் சீனா அந்த அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஐஐடி கீழ் எர்த்சென்ஸ் இது குறித்த ஆய்வை நடத்தியது. சீனாவின் மெடாக் திட்டம் அமைய உள்ள பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அணை அருணாச்சல பிரதேசத்துக்கு மேலே, இந்தியா- சீனா எல்லை அருகே அப்பால் திபெத் பகுதியில் அமைய உள்ளது. திபெத்தில் யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படும் இந்த நதி, அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழைந்ததும் சியாங் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் மற்ற ஆறுகளுடன் இணைந்து பிரம்மபுத்திராவாக மாறி அசாம் வழியாக பாய்கிறது.

மாற்றங்கள்

மெயின்லிங் அருகே பிரதான அணை அமைய உள்ள பகுதியில், கடந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில் குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் இருந்துள்ளன. ஆனால், அதே ஆண்டு டிசம்பரில் எடுக்கப்பட்ட படங்களில் குடியிருப்புகள் அகற்றப்பட்டிருப்பதும், நிலம் சமன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத படங்களை ஆய்வு செய்தால் ஆற்றின் வடக்கு கரையில் புதிய சாலைகள், தற்காலிக தங்குமிடங்கள், அலுவலகங்கள் ஆகியவை உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஆற்றின் நீரை திசைதிருப்புவதற்கான பணிகளும் அங்கு நடக்கும் என தெரிகிறது.

படுவேகமாக நடக்கும் பணிகள்

மெடாக் பகுதிக்கு அருகே சுரங்க பாதை வெளியேறும் இடம் அமையும் பகுதியிலும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன. 2018 முதலே அங்கு சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. 2021ல் பாலம், புதிய கட்டமைப்புகள், தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு வளாகம் ஆகியவை உருவாகியுள்ளன. 2023-24 காலகட்டத்தில் மேலும் பல கட்டிடங்கள், கான்கிரீட் உருவாக்கும் சிறப்பு நிலையங்கள், பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனரக இயந்திரங்களும் அங்கு அதிகளவில் இருக்கிறதாம்.

யார்லுங் சாங்போ நதி, நம்சா பார்வா மலைத்தொடரை சுற்றி வந்த பிறகு இந்தியாவுக்குள் நுழையும் பகுதியில் ஐந்து நீர்மின் நிலையங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்த பகுதியில் 2,000 மீட்டருக்கும் அதிகமான உயர வேறுபாடு இருப்பதால், அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என சீனா கருதுகிறது.

பிரம்மாண்ட அணை

2025 ஜூலை மாதம் திபெத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சீன பிரதமர் லி கியாங் பங்கேற்றார். இந்த திட்டத்துக்கு சுமார் 1.2 டிரில்லியன் யுவான், அதாவது சுமார் ரூ.14 லட்சம் கோடியை சீனா செலவிட உள்ளது.. திட்டம் முழுமையாக நிறைவடைந்தால் 60 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். உலகின் மிக பெரிய நீர்மின் திட்டங்களில் ஒன்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பதிலடி

இந்தியாவுக்கு மேல்பகுதியில் இவ்வளவு பெரிய அணை அமைக்கப்படுவது அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அணை செயல்பாட்டுக்கு வந்தால் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம், நீர் இருப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதும் கவலையாக உள்ளது. இதற்குப் பதிலாக அருணாச்சல பிரதேசத்தில் 11,200 மெகாவாட் திறன் கொண்ட சியாங் அப்பர் மல்டிபர்பஸ் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது.

சீனாவில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால், அதன் பாதிப்பை குறைக்கவும், ஆற்றின் நீரோட்டத்தை கட்டுப்படுத்தவும் இந்த அணை உதவும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. இந்த திட்டத்தில் 9.2 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் அமை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+