ஐஏஎஸ் பெண் கலெக்டரின் கறார்.. 115 நாளாகியும் தவெக எம்எல்ஏ மீது நோ ஆக்‌ஷன்! விஜய்யின் சேஃப்ட்டி எங்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில், 115 நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படாதது அரசின் செயல்பாட்டையே கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. உள்புகார் குழுக்கள் இருக்கின்றன. விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகளும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது ஏன் நடவடிக்கை தாமதமானது என்பதை நீதிமன்றம் விசாரிக்கிறது என்று தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழகக் குரல் சேனலுக்கு, அரசியல் திறனாய்வாளரும், மூத்த வழக்கறிஞருமான தராசு ஷ்யாம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான புகார் விவகாரத்தில் நீதிமன்றம் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. சில நீதியரசர்கள் எந்த சமரசத்திற்கும் தயாராக இருக்க மாட்டார்கள். எதையும் விட்டுவிட மாட்டார்கள். இந்த புகார் 31A பிரிவின் கீழ் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுமார் 115 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மிக முக்கியமான கேள்வி.

TVK MLA Complaint

கள்ளக்குறிச்சி கலெக்டர்

புகார் அளிக்கப்பட்டதற்கு முன்பே சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும். புதிய அரசு மே மாதம் அமைந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது அந்த எம்எல்ஏவும் சட்டப்பேரவைக்கு வந்திருப்பார். முதலமைச்சரைச் சந்தித்திருப்பார். அதிகாரிகளையும் சந்தித்திருப்பார். அப்படியிருக்கும்போது, ஆட்சி அமைந்த ஒரு மாதத்திற்குள்ளேயே ஓர் எம்எல்ஏவுக்கு இப்படியொரு துணிச்சல் வந்திருக்கிறது என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயம்.

இதில் விஜய்யின் அணுகுமுறையும் கேள்விக்குள்ளாகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன், நான் அண்ணன் என்று கூறியவர், தனது கட்சி எம்எல்ஏ மீது புகார் வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்? விஜய்யின் வேஷம் அம்பலப்பட்டுவிட்டது.. எம்எல்ஏக்கள் மீது புகார் வந்தாலும், எனக்கு ஆட்சி பொறுப்புதான் முக்கியம். நான் பெண்களுக்குக் கொடுத்த பாதுகாப்பு வாக்குறுதியில் சமரசம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் அவருடைய முன்னுரிமை போலும்.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதுதான் முக்கியம் என்ற எண்ணத்தில் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொண்டிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

எம்எல்ஏக்களின் பலம்

தனது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பலத்தைப் பாதுகாப்பதற்காக இத்தகைய புகார்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறாரா என்பதையும் பார்க்க வேண்டும்... இதில் அமைச்சர்களும் அம்பலப்பட்டிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவற்றை மறுத்திருக்கிறார்கள்.

இதேபோன்ற புகார் மேற்கு மண்டலத்தில் ஓர் அமைச்சர் மீதும் எழுந்தது... இத்தகைய செயல்களை வயதுக் கோளாறு என்று கடந்து சென்றுவிட முடியாது. இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற மனப்பான்மை கட்சிக்குள் இருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

நாங்கள் எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் போன்றவர்களின் ரசிகர்களாக இருந்தோம்... அவர்கள் தங்களுடைய சினிமாக்களின் மூலம் தாயை மதிக்க வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதை கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் இன்றைய தவெக கட்டமைப்பில் அத்தகைய அரசியல் வழிகாட்டுதல் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

மாவட்ட ஆட்சியர் அரசு ஊழியர்

சட்டப்படி எம்எல்ஏவும் பொது ஊழியர் தொடர்பான வரம்புக்குள் வருகிறார். மாவட்ட ஆட்சியர் அரசு ஊழியர். இருவருமே பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டத்தின் வரம்புக்குள் வருகிறார்கள். இந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எம்எல்ஏ கைது செய்யப்படுவதுடன், அவருடைய பதவித் தகுதி குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எம்எல்ஏ பதவிக்குரிய கண்ணியத்தை அவர் காப்பாற்றத் தவறியிருக்கிறார் என்ற கேள்வியும் எழுகிறது.

இதில் அதிகாரிகளின் பொறுப்பும் விசாரிக்கப்பட வேண்டும். புகார் அளிக்கப்பட்டபோது தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் எந்தச் சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது புரிகிறது.

ஆனால் ஒரு பெண் அதிகாரி உடனடியாக இதுபோன்ற புகாரை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் பல சங்கடங்கள் இருக்கலாம். அவருடைய கணவரும் பக்கத்து மாவட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும்போது, உடனடியாகப் புகார் அளிப்பது எளிதான விஷயம் அல்ல. அப்படியிருந்தும் புகார் அளிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?

ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலமைச்சர் ஆரம்பத்திலேயே எம்எல்ஏவை அழைத்துக் கண்டித்திருந்தால், அவர் மாவட்ட ஆட்சியரிடம் மன்னிப்புக் கேட்டிருக்கலாம். அப்போதே பிரச்சினை முடிந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.

115 நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படாதது அரசின் செயல்பாட்டையே கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. உள்புகார் குழுக்கள் இருக்கின்றன. விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகளும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது ஏன் நடவடிக்கை தாமதமானது என்பதை நீதிமன்றம் விசாரிக்கிறது.

மொத்தத்தில் இந்த அரசின் செயல்பாட்டில் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகள் இருக்கின்றன. அரசிடம் இருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைவானது. அவர்களை அரசியல் மோதல்களுக்காகப் பயன்படுத்தினால் மக்கள் பணிகளைச் செய்வதற்கு நேரம் இருக்காது. கீழ்மட்டத்திலேயே புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆயிரம் கண்கள் வேண்டும்

முதலமைச்சருக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். பிரதமருக்கு லட்சம் கண்கள் வேண்டும். அதுதான் அந்தப் பதவியின் பொறுப்பு. ஆனால் முதலமைச்சர் இன்னும் சினிமா கதாநாயகன் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்றுதான் தோன்றுகிறது. அந்தத் தோற்றத்தையே தனது பலமாக நினைத்து தொடர்ந்து அதில் கவனம் செலுத்துகிறார். பதவிக்கு வந்த பிறகு மாற வேண்டும். அந்தப் பதவிக்குரிய பொறுப்பையும் அணுகுமுறையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக, இவ்வளவு நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு இப்போது கைது போன்ற அதிரடியான நடவடிக்கைக்குச் செல்கிறார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+