பக்தர்களுக்கு தடை இல்லை.. ஆனால் 258 பேர் தடுப்புக்காவல்! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்ற வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்கும் வகையில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுவரை தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 258 பேரும் ஏதாவது ஒரு அமைப்புடன் தொடர்புடையவர்கள் மட்டுமே என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

Thiruparankundram

தடை இல்லை

அப்போது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டத்துக்கு தற்போது எந்த தடையும் இல்லை என்றும், பக்தர்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தரிசனத்துக்காக பக்தர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அதிகாரிகள் யாரும் உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி பக்தர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்றும், தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் வாதிட்டார்.

தடுப்பு காவல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும், இதுவரை 258 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவு என்பது மலை உச்சியில் தீபம் ஏற்றுவது மட்டுமின்றி சட்ட ஒழுங்கு தொடர்பானது என்று அவர் குறிப்பிட்டார்.

அப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவில் நவம்பர் 24ஆம் தேதியான இன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவித்திருந்ததை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் போகலாம் என்ற அச்சத்தில்தான் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.

நிறைவேற்ற வேண்டும்

மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மலைக்கு தொடர்பு இல்லாத நபர்கள் செல்வதை தடுப்பதற்காக மட்டுமே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கு அது தடையாக இருக்காது என்றும் விளக்கியிருந்தார். அப்போது அரசியலமைப்பு சட்டத்தின் 144வது பிரிவின்படி, நாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மீறியதாக குறிப்பிட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்டவர் என்றும் அதற்கு முரணான ஆலோசனைகளை புறக்கணித்து உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு நிலுவையில் இருப்பதை காரணமாக காட்டி, அந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க கூடாது என்றும் தெரிவித்தது.

வழக்கு முடித்து வைப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள மத வழிபாட்டு உரிமைகளை பாதிக்கும் வகையில் தடை உத்தரவு இருக்கக் கூடாது என்றும் கூறிய நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. மேலும் தடுப்பு காவலில் உள்ளவர்களையும் விரைவில் விடுவிக்குமாறு அறிவுறுத்தியது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+