Vanni Arasu: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம்: யாரும் தப்பிக்கவே முடியாது! வன்னி அரசு சீற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் அரசும் நிற்கும், விசிகவும் நிற்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. நீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன மாதிரி போகிறது என்பதை காத்திருந்துதான் சொல்ல முடியும் என வன்னி அரசு கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு முறை தவறிய வகையில் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி, கள்ளக்குறிச்சி எஸ்பியிடம் புகாரளித்த நிலையில், தவெக எம்.எல்.ஏவுக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Vanni Arasu reacts Kallakurichi TVK MLA Arul Vignesh issue No one will be able to escape

அமைச்சர் வன்னி அரசு பதில்

கடந்த ஜூலை மாதமே பெண் ஐஏஎஸ் அதிகாரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் நீதிமன்றம் வந்த பிறகே, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், விசிகவை சேர்ந்தவருமான வன்னி அரசுவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வன்னி அரசு கூறியதாவது:-

விசிக எப்போதும் நீதியின் பக்கம் நிற்கும். தவறு செய்தால் முதல் தகவல் அறிக்கை போட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்று நீதிமன்றமும் வழிகாட்டியுள்ளது. ஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் அரசும் நிற்கும், விசிகவும் நிற்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

யாரும் தப்பிக்க முடியாது

அதனால், இதில் யாரும் தப்பிக்க முடியாது. புகார் கொடுத்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். அதனால்தான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறோம். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறோம். புகார் கொடுத்து இருக்கிறார்கள்.. உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விசாரணையும் மேற்கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்..

நீதிமன்றமும் வழிகாட்டியுள்ளது. நீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன மாதிரி போகிறது என்பதை காத்திருந்துதான் சொல்ல முடியும்" என்றார். திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வன்னி அரசு, "தமிழ்நாடு அரசு மிக தெளிவாக பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்க் பரிவார் கும்பலுடைய வன்முறை, பதற்றம் சமூக பதற்றம், வட மாநிலங்களில் எப்படி அதை நடத்த வேண்டும் என முனைந்தார்களோ அதேபோல தமிழ்நாட்டிலும் தொடர்ந்து அவர்கள் முனைகிறார்கள்.

முழுக்க முழுக்க மக்களுக்கு எதிராக..

அவை எல்லாவற்றிற்கும் தமிழ்நாட்டு மக்கள், அரசு எல்லாரும் சேர்ந்து பதிலடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த முறையும் முனைந்தார்கள். அது நடக்கவில்லை. இப்பொழுதும் முழுக்க முழுக்க மக்களுக்கு எதிராக, இந்து மக்களுக்க் எதிராக, இந்து மக்களின் உணர்வை புண்படுத்தகூடிய இந்து அப்பாவி மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய கும்பல்தான் சங்கபரிவார் கும்பல்.

அந்த கும்பல்தான் இந்த வேலையை செய்து வருகிறது. காலம் காலமாக எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமோ அந்த இடத்தில் தீபம் ஏற்றுவதுதான் இந்து மக்களுடைய மத நம்பிக்கை. இந்துக்களின் உணர்வு. ஆனால் அங்கே இல்லாமல் வேறு இடத்தில் ஏற்றுகிறேன் என்றால் என்ன அடிப்படையில் ஏற்ற முடியும்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+