முதுமலை புலிகள் காப்பகத்தில் புலியை நோக்கிச் சென்று ரீல்ஸ்.. அமைச்சர் வன்னி அரசு செயலால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்துவது போல பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்ற தமிழக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, வனப்பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களில், காட்டுக்குள் புலியை நோக்கி ஓடுவது போன்றும், வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தின் மீது அமர்ந்திருப்பது போன்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் ட்ரெக்கிங் செய்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Minister Vanni Arasu Under Fire Over Tiger Chase Video in Mudumalai Reserve

முதுமலை புலிகள் காப்பகம் என்பது புலிகள் காப்பக புலம். இங்கு சாதாரண சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கூட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வாகனத்தை விட்டு இறங்க கூடாது, சத்தம் போடக்கூடாது, புலி, யானையை பார்த்தால் 100 மீட்டர் தள்ளி நிற்க வேண்டும், வனத்துறை வாகனம் மீது ஏறுவது கடும் குற்றம், ட்ரெக்கிங் செய்ய முற்றிலும் தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைச்சருக்கு மட்டும் அனுமதி எப்படி என சர்ச்சை வெடித்துள்ளது. அமைச்சர் வன்னி அரசு முதுமலை வனப்பகுதிக்குள் புலியை பார்த்து அதனை விரட்டிச் செல்வது, யானை உள்ளிட்ட வன விலங்குகளை அருகில் சென்று பார்த்தது, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து போஸ் கொடுப்பது போன்ற வீடியோக்களை ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அவர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தடையை மீறி சென்றுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

முதுமலையில் தங்கும் விடுதிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் உள்ளூர் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை எவ்வாறு வனத்துறையினர் நடக்க வைத்து வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாலையில் செல்லும் ஒருவர் ஒரு யானையை துரத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்யும் வனத்துறை, யானைக்கு தொந்தரவு செய்தார் என்று உடனடியாக கைது செய்கிற வனத்துறை, யானைகளையும் புலிகளையும் அவற்றின் வாழ்விடத்திற்கே சென்று விரட்டும், அச்சுறுத்தல் செய்யும் அமைச்சர் வன்னி அரசு மீது வழக்கு பதிவு செய்யுமா? எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+