திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது.. நெல்லை தச்சநல்லூரில் தடுத்தது போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது இல்லத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரனை நெல்லை தச்சநல்லூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கார்களில் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டனர். தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி நயினார் நாகேந்திரனை கைது செய்தனர்.

Thiruparankundram Deepam Row Nainar Nagendran arrested near Thachanallur in Tirunelveli

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை ஏற்று தீபத்துணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது மாற்று திட்டம் வைத்து இருக்கிறதா? என்று தற்போது வரை தெரியவில்லை. இன்று கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் உச்சிபிள்ளையார் கோவில் அருகே தான் தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேற்றில் இருந்தே திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவுப் போடப்பட்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தென் மாவட்ட இந்து முன்னணி அமைப்பு தலைவர்களை போலீசார் வீட்டுக்காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் நோக்கி தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் நெல்லை தச்சநல்லூரில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக நயினார் நாகேந்திரன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும், சிறிது நேரத்தில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கார்களில் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டனர்.

நயினார் நாகேந்திரன் வந்த வேனுக்கு முன்னும் பின்னும் பாஜக தொண்டர்கள் வாகனங்களில் வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில்தான், தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி நயினார் நாகேந்திரனை கைது செய்தனர். கார்களில் வந்த பாஜக நிர்வாகிகள் தச்சநல்லூர் சோதனை சாவடி அருகே சாலை ஓரம் கார்களை நிறுத்திவிட்டு சிறிது நேரம் காத்து நின்றனர். இதனால் அப்பகுதிகளில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+