தியேட்டரில் மட்டுமல்ல ஓடிடியிலும் கெத்து காட்டும் "சீன்”.. எந்த தளத்தில் வெளியாகுது தெரியுமா?
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான சீன் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில், இப்போது ஓடிடி வெளியீட்டிலும் பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. தியேட்டரில் படம் பார்க்க தவறிய ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வரும் என்று காத்திருக்கும் நிலையில், எந்த தளத்தில் வெளியாகப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யாவின் நடிப்பு
ஆவேசம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த படம் ஒரு க்ரைம் திர்ல்லராக உருவாகி இருக்கிறது. இதில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு சிங்கம், காக்க காக்க படத்தில் போலீஸ் கேரக்டரில் சூர்யாவை வித்தியாசமான கோணத்தில் பார்த்து இருப்போம். ஆனால் சீன் படத்தில் முற்றிலும் வேறு விதமான ஒரு போலீஸ் கேரக்டரில் வந்திருக்கிறார்.

சீன் வசூல் நிலவரம்
அவருடன் நஸ்ரியா நசீம், நஸ்லின், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொடர்ந்து நடக்கும் கொலைகள், அதன் பின்னணியில் இருக்கும் பழைய சம்பவங்கள் என விறுவிறுப்பான விசாரணையை மையமாக வைத்து படம் நகருகிறது. நவம்பர் 6ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்தது. வெளியாகிய சில வாரங்களில் உலக அளவில் 260 கோடிக்கும் அதிகமான வசூல் செய்துள்ளதாக வர்த்தக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன் ஓடிடி அப்டேட்
இதனால் சூர்யாவின் வெற்றி படங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இப்போது இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிலிக்ஸ் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் சுமார் 88 கோடி என்ற பெரிய தொகைக்கு டிஜிட்டல் உரிமம் விற்பனையாக உள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருப்பதால், அந்த கணக்கின்படி பார்த்தால், நவம்பர் 6ஆம் தேதி வெளியான சீன் திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி நெட் பிலிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த தேதி இன்னும் படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் நல்ல வசூல் பெற்று, இப்போது பெரிய தொகைக்கு ஓடிடி உரிமம், விற்பனை என சீன் திரைப்படம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications
