சீன் படத்தின் 12 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? சூர்யாவுக்கு கிடைத்த மாஸ் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான "சீன்" திரைப்படம் தியேட்டரில் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் வெளியான முதல் நாளிலிருந்து நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், 2வது வாரத்திலும் ஓரளவுக்கு வரவேற்பு தொடர்கிறது. இந்த படத்தின் மொத்த வசூல் உலக அளவில் 252 கோடியை தாண்டி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சூர்யா ரசிகர்கள் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Suriya Scene Movie Box Office Jithu Madhavan Nazriya

சீன் பட வசூல் நிலவரம்

நவம்பர் 6ஆம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்து வசூலில் நல்ல தொடக்கத்தை பெற்றுவிட்டது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் வசூல் அதிகரித்தது. இப்போது 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தின் இந்திய வசூல், வெளிநாட்டு வசூல் என இரண்டையும் சேர்த்து உலக அளவில் 252.45 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்நிக் தளம் தெரிவித்துள்ளது.

சாக்நிக் வெளியிட்டுள்ள கணக்கின்படி, சீன் படத்தின் இந்திய நெட் வசூல் 142.40 கோடி ஆக இருக்கிறது. இந்தியாவில் மொத்த கிராஸ் வசூல் 165.45 கோடி, வெளிநாடுகளில் மட்டும் 87 கோடி வசூல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகளாவிய கிராஸ் வசூல் 252.45 கோடியை எட்டி இருக்கிறது. முதல் வாரத்தை ஒப்பிடும்போது இரண்டாவது வாரத்தில் வேகம் கொஞ்சம் குறைந்தாலும் வார இறுதியில் மீண்டும் உயர்ந்து இருக்கிறது. 2வது சனிக்கிழமை நவம்பர் 14ஆம் தேதி 9.50 கோடியும் ஞாயிற்றுக்கிழமை 9. 50 கோடியும் இந்திய நெட் வசூலாக கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் திங்கட்கிழமை முதல் மீண்டும் வசூல் குறைந்து நவம்பர் 17ஆம் தேதி 2.90 கோடியாக இருந்தது.

சூர்யாவுக்கு அடுத்தடுத்து வெற்றி

இந்த வருடமே சூர்யாவுக்கு சூப்பர் வருடம் என்று சொல்லலாம். கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனால் சூர்யா கதை இனி அவ்வளவுதான், முடிந்துவிட்டது என்றெல்லாம் சிலர் சொல்லி வந்தனர். ஆனால் 2026ல் வெளியான படங்கள் அவருக்கு செமையாகவே கம்பேக் கொடுத்து விட்டது. கருப்பு படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது, அதைத் தொடர்ந்து வெளியான விஸ்வநாதன் அண்ட் ஃபேன்ஸ் படமும் சூர்யாவிற்கு மாஸ் வசூலை பெற்றுக் கொடுத்தது.

அதேபோல இப்போது சீன் படமும் அடுத்த ஹிட் அடித்து இருக்கிறது. இந்த படத்தில் சூர்யா வழக்கமான மாஸ் ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டும் இல்லாமல் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யா இன்பராஜ் என்ற டிஎஸ்பி கேரக்டரில் வருகிறார். சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லிம், லால், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஸ்பெஷல்

குறிப்பாக இன்ஸ்ட்டா பிரபலங்கள், மலையாள நடிகர்கள் இணைந்திருப்பது படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. டோமினோ தாமஸின் சிறப்பு தோற்றமும் படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. சூர்யாவின் முந்தைய படங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இந்த வசூல் விவரங்களை பகிர்ந்து வரும் நிலையில், சீன் படத்தின் அடுத்தடுத்த நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவம்பர் 18ஆம் தேதி 13 வது நாள் வசூல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ள 12 நாள் தகவல் கணக்கின்படி பார்க்கும்போது, 252.45 கோடியை எட்டி இருப்பதால் 300 கோடி வசூல் லிஸ்டில் இந்த படமும் இணையுமா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+