ஆபாச படம் – வீடியோ இருக்கு.. திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை மிரட்டி காதலன் கொடுத்த தண்டனை

Subscribe to Oneindia Tamil

ங்களூர்: பெங்களூரில் ஹோட்டலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காதலியை 3வது மாடியில் இருந்து தள்ளி கொன்றுவிட்டு காதலன் நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவின் ஹாசனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 26). இவர் பெங்களூர் கங்கமணகுடி போலீஸ் எல்லைக்குட்பட்ட தனியார் விடுதியின் 3வது மாடியில் இருந்தார். கடந்த 19ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் திடீரென்று ஐஸ்வர்யா 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

Bengaluru man kills girl friend

மாடியில் இருந்து நேரடியாக மின்கம்பத்தின் மீது விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் ஐஸ்வர்யா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். ஆனால் விசாரணையில் அவர் தற்கொலை செய்யவில்லை என்பதும் காதலன் சந்தோஷ் தான் அவரை 3வது மாடியில் இருந்து தள்ளி கொன்று இருப்பதும் தெரியவவந்தது. அதாவது ஐஸ்வர்யாவும், தனியார் நிறுவன ஊழியரான சந்தோஷும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலை ஐஸ்வர்யா குடும்பத்தினர் ஏற்கவில்லை. ஆனால் ஐஸ்வர்யா உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியின்றி குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் சந்தோஷ்க்கு திருமணத்தில் விரும்பவில்லை. அவர் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. கடந்த 19ம் தேதியும் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் இண்டர்வியூ செல்வதாக கூறிவிட்டு தனியார் விடுதிக்கு வந்தார். அங்கு சந்தோஷும் இருந்தார்.

இருவரும் மதுபானம் குடித்துள்ளனர். போதையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருமணத்தை தாமதம் செய்வது தொடர்பாக ஐஸ்வர்யா கேள்வி கேட்டுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச போட்டோ, வீடியோவை காண்பித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதனை ஐஸ்வர்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை. நொந்துப்போன அவர் தற்கொலை செய்வதாக கூறினார்.

அப்போது, ''தற்கொலை செய்ய வேண்டுமானால் செய்து கொள். அது உன்னோட விருப்பம்'' என்று கூறி தள்ளியுள்ளார். இதில் கால்தவறிய ஐஸ்வர்யா விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். ஐஸ்வர்யா இறந்ததை அறிந்த சந்தோஷ் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நினைத்தார். இதனால் அவர் தங்களுக்குள் நடந்த சண்டை பற்றி போலீசாரிடம் கூறாமல் மழுப்பினார். ஆனால் போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+