ஐடி வேலையை விட்ட பெங்களூரு தம்பதி.. மாதம் 6 லட்சம் வருமானம் ஈட்டிய சூப்பர் பிசினஸ்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐடி வேலையை விட்டுவிட்டு வந்த தம்பதி, வீட்டுமுறை உணவை தயாரித்து விற்பதன் மூலம், மாதம் ரூ.6 லட்சம் வருமானம் பெற்று வருகின்றனர். இந்த பிசினஸ் சிறப்பாக போவதாகவும், பெங்களூர் முழுவதும் பிசினஸை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஐடி வேலை என்றாலே தலைவலிப்பிடித்ததுதான். எப்போடா இந்த வேலையை விட்டுவிட்டு வெளியே வருவோம் என்று இருக்கும். அப்படித்தான் இருந்தது தியா கிருஷ்ணகுமார்-ஆதித்யா நடராஜன் தம்பதியினருக்கு.

Couple Quit IT Jobs

எனவே வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டனர். ஆனால் என்ன தொழில் செய்வது? எப்படி செய்வது? எங்கிருந்து தொடங்குவது? என ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன. அதேநேரம் அவர்கள் ஒரு வித்தியாசமான சிக்கலையும் எதிர்கொண்டார்கள். அதாவது, வீட்டில் இருவரும் வேலைக்கு செல்வதால் சத்தான உணவை சமைக்க போதுமான நேரம் இல்லை. வெளியில் சாப்பிடலாம் என்றாலும், ஓட்டல்களை முழுமையாக நம்பவும் முடியவில்லை. வீட்டுமுறை சாப்பாடு கிடைக்காததை இவர்கள் கவனித்தார்கள்.

இங்குதான் இவர்களுக்கு ஒரு யோசனை பிறக்கிறது. வீட்டுமுறை உணவை தயார் செய்து விற்பனை செய்தால் என்ன? அதுவும் குறைந்த விலையில்.. யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் சரிப்பட்டு வருமா? என்று தயங்கினார்கள். கையில் ரூ.15 லட்சம் அளவுக்கு பணம் இருக்கிறது. முதலீடுக்கு இது போதும்தான். 3 ஆண்டுகள் ஐடி வாழ்க்கை சலித்துவிட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்று முடிவெடுத்த அவர்கள்.. துணிந்து இறங்கினார்கள்.

Couple Quit IT Jobs

பெயருக்கு வீட்டுமுறை உணவு என்று வைத்துக்கொண்டு.. ஓட்டலில் சமைத்து கொடுப்பதை போல அல்லாமல், நிஜமாகவே வீட்டுமுறைப்படி சமைக்க தொடங்கினார்கள். ஒரு ஊட்டச்சத்து நிபுணர், சமையல்காரர் உட்பட 6 பேர் கொண்ட குழுவுடன் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் 'வெல்ஃபெட்' எனும் நிறுவனத்தை தொடங்கினார்கள்.

இந்நிறுவனம் பருப்பு, காய்கறிகள், சோள ரொட்டி, பனீர், டோஃபு மற்றும் சிக்கன் போன்ற புரதச்சத்து நிறைந்த எளிய இந்திய உணவுகளை கொடுக்க தொடங்கியது. விநியோகத்திற்கு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஸ்டீல் பாக்ஸ்களை பயன்படுத்தியது.

தினமும் காசு கொடுத்து வாங்குவதை போல இல்லாமல், 3 நாட்கள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் என சந்தா திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 3 நாள் சோதனை திட்டங்களை பொறுத்தவரை ஒரு வேளைக்கு ரூ.289 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதியம் மற்றும் இரவு என ஒரு நாளைக்கு 2 வேளை உணவு விநியோகிக்கப்படும். ஒரு வார சந்தா திட்டத்திலும் இதே நடைமுறைதான். ஆனால் விலை ஒரு வேளைக்கு ரூ.279 என குறையும். ஒரு மாதத்திற்கு என எடுக்கும்போது ஒரு வேளைக்கு ரூ.269 என்று குறைவாக வசூலிக்கப்படுகிறது. டெலிவரி கட்டணம், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை என அனைத்தும் இந்த கட்டணத்தில் அடங்கும்.

இதுவரை 1,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 55,000க்கும் அதிகமான உணவுகளை இந்நிறுவனம் விநியோகித்திருக்கிறது. முதல் ஆண்டில் ரூ.45 லட்சம் வருவாய் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை 9 மாதங்களில் ரூ.59 லட்சத்தை வருவாயாக பெற்றிருக்கிறது. மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பதால், பெங்களூர் முழுவதுக்கும்.. ஹைதராபாத்திலும் நிறுவனத்தை விரிவுபடுத்த தியா கிருஷ்ணகுமார்-ஆதித்யா நடராஜன் தம்பதியினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

இவர்களின் வெற்றி, ஐடி ஊழியர்கள் பலருக்கும் புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+