கணவன் மீது ஏறி உட்கார்ந்து மூக்கை மூடிய மனைவி.. கழுத்தை பிடித்த கள்ளக்காதலன்.. பெங்களூரு கொடுமை

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் கணவர் உயிரிழந்த சம்பவத்தில் மனைவி சொன்ன தகவல்களால் முதலில் போலீஸாருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.. ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கணவரின் மரணம் தொடர்பாக மனைவியையும் அவருடன் தொடர்பில் இருந்த நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது பெங்களூருவில்?

பெங்களூரு பெட்டதாசனபுரா மெயின் ரோட்டில் உள்ள தொட்டதொகுரு பகுதியில் வசித்து வருபவர் உபேந்திரா.. 41 வயதாகிறது.. மனைவி பெயர் அனிதா (36).. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்..

Bengaluru Shocking Murder Extramarital Affair

பெங்களூரு தம்பதி

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்த சேர்ந்த இவர்கள், தனியார் வங்கிகளுக்கான கடன் தொடர்பான சிறிய கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று உபேந்திரா குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் அனிதா தனது மைத்துனர் ராஜேந்திராவிடம் கதறி அழுதவாறே தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உபேந்திராவின் மரணம் குறித்து ராஜேந்திரா போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அனிதாவிடம் விசாரணை நடத்தினர்.. அப்போது அனிதா, கணவர் குளிப்பதற்காக பாத்ரூம் சென்றதாகவும், எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து மாரடைப்பால் இறந்து விட்டதாகவும் போலீசாரிடம் சொன்னார்.

கழுத்து பகுதியில் காயம்

இதையடுத்து சடலத்தை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது உபேந்திராவின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்கள் இருந்ததை பார்த்த போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்து, ராஜேந்திரா அளித்த புகாரின் அடிப்படையில் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணையையும் முடுக்கி விட்டனர்.

மேலும், அனிதாவின் ந்டவடிக்கைகளை கண்காணித்தபடியே, அவரது செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர்.. அதேபோல உபேந்திராவின் வீட்டைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

அனிதாவின் தவறான உறவு

இதனிடையே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.. அதில் மூச்சுத் திணறல் காரணமாகவே உபேந்திரா உயிரிழந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, அனிதாவின் செல்போன் அழைப்புகளில் அதிக நேரம் மதுசூதனன் ரெட்டி என்பவருடன் பேசி வந்ததும் உறுதியானது.. இதையடுத்து அனிதா விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

சிசிடிவி கேமரா, செல்போன் அழைப்புகள், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என நாலாபக்கமும் வசமாக மாட்டிக்கொண்ட அனிதா, இப்போது வேறு வழியின்றி, கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

அதாவது அனிதாவின் ஊரைச் சேர்ந்த தலசானி மதுசூதன் ரெட்டி (46) என்பவர், பெங்களூருவில் டாக்சி டிரைவராக உள்ளாராம்.. அவருடன் அனிதாவுக்கு தவறான உறவு இருந்து வந்துள்ளது.. ஒருநாள் மதுசூதனுடனான அனிதாவின் உறவு உபேந்திராவுக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்..

நள்ளிரவில் மனைவி மாஸ்டர் பிளான்

அனிதாவை பலமுறை எச்சரித்ததுடன், மதுசூதனையும் அந்த உறவைக் கைவிடும்படியும் உபேந்திரா எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.. அப்படித்தான் கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவும் இது தொடர்பான சண்டை தம்பதிக்குள் வந்துள்ளது.

அப்போது கோபத்திலிருந்த உபேந்திரா அனிதாவை சரமாரியாக அடித்து விட்டார்.. உடனே ஆவேசமடைந்த அனிதா, மதுசூதனுக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். நள்ளிரவில் மதுசூதனிடம், உபேந்திராவை கொன்றுவிடலாம் என்று அனிதா சொன்னாராம்..

மூக்கை பிடித்த மனைவி

அப்போது வீட்டின் ஹாலில் 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். படுக்கையறையில் உபேந்திரா தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற மதுசூதன், உபேந்திராவின் மீது உட்கார்ந்து 2 கைகளாலும் அவரது கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். அதே நேரத்தில் அனிதா தனது கணவரின் முகத்தையும் மூக்கையும் இறுக்கமாக மூடிகொண்டாராம். இதில் மூச்சு திணறி துடிதுடித்தே உபேந்திரா உயிர் பிரிந்துள்ளது..

உபேந்திரா உயிரிழந்ததைத் தொடர்ந்து மதுசூதன் அங்கிருந்து சென்றுவிட்டார். இதற்கு பிறகே அனிதா, தன்னுடைய கணவனுக்கு மாரடைப்பு என்று நாடகமாடினாராம். .. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து ஜெயிலில் தள்ளியுள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+