"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா".. திருப்பரங்குன்றம் தீப வீடியோ வெளியிட்ட அமித் ஷா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அதர்மத்தை அழித்து ஞானத்தை அருளட்டும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

Amit Shah Shares Thirupparankundram Deepam Video Posts Vetrivel Muruganukku Arogara

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக போலீசார் விலகிக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் (CRPF) ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவினர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோயில் பட்டர்கள், நீதிபதிகள் இணைந்து தீபத்தை ஏற்றிவைத்தனர். மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதை, மலையடிவாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து, அரோகரா கோஷங்கள் எழுப்பினர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டதை, இந்துத்வ அமைப்புகள், பாஜகவினர், பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்ட வீடியோவை பகிர்ந்து, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" எனத் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அதர்மத்தை அழித்து அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், ஞானத்தையும் அருளட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+