Delimitation.. காங்கிரஸ் கனவிலும் நினைத்தே பார்க்காத சிக்கல்.. ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் ராகுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி வரையறை மசோதா நிறைவேறினால் காங்கிரஸ் கட்சி கனவிலும் நினைத்து பார்க்க முடியாத சிக்கல் ஒன்று இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதற்கு காரணம், 543 தொகுதிகள் என்கிற நிலையிலேயே காங்கிரஸ் பல மாநிலங்களில் பாஜகவை சமாளிக்க முடியாத நிலையில் இருக்கிறது. இனி 850 என்கிற அளவில் உயர்ந்தால், எப்படி சமாளிப்பது... ஆட்சிக்கு வருவது கடினமாகும் என்று அஞ்சுகிறதாம். பாஜகவால் தென்மாநிலங்கள் ஆதரவு இல்லாமலேயே மெஜாரிட்டி பெறக்கூடிய நிலை வந்துவிடும் என்றும் காங்கிரஸ் அஞ்சுகிறது. இந்த மசோதாவை திமுக ஆதரிக்க உள்ளதால், ஸ்டாலின் மீது ராகுல் காந்தி கடும் கோபத்தில் உள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வது மட்டும் கவலை இல்லை.. Gerrymandering எனப்படும் அரசியல் நோக்கத்துடன் தொகுதி எல்லைகளை மாற்றும் அபாயம் இருக்கிறது என்பது தான். உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொகுதி எல்லைகள் எவ்வாறு வரையறுக்கப்படும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கவலையாக உள்ளது.

எந்தெந்த பகுதிகள் ஒன்றாக இணைக்கப்படும்? புதிய தொகுதிகளின் சமூக, அரசியல் அமைப்பு எப்படி இருக்கும்? தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவுகள் வெளிப்படையாக இருக்குமா என்பது தான் கவலையாக உள்ளது. அதனால் திமுகவை ராகுல் காந்தி கடுமையாக இன்று விமர்சித்து இருந்தார். தமிழ்நாட்டின் எட்டப்பன் திமுக என்று கூறியிருந்தார்.

Delimitation A problem the Congress never even imagined Rahul Gandhi is angry with MK Stalin

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். FairDelimitation என்ற கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு தந்துள்ளதாக ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அந்த பதிவில் கூறுகையில், "கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக தொகுதி மறுவரையறை சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த தொகுதி மறுவரையறையைத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே தொகுதி மறுவரையறை நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+