திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் முன் தூண் அருகில் நின்று விஜய்யின் டிரேட் மார்க் சைகை செய்த நபர்
மதுரை: உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டதும் மலை அடிவாரத்தில் இருந்த பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. இதற்கிடையே, தீபம் ஏற்றப்படும் முன்பாக தூண் அருகே நின்ற நபர் ஒருவர், முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் செய்து காட்டிய வைரல் செய்கையை செய்து காட்டினார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்காக இன்று காலையிலேயே திருப்பரங்குன்றம் பகுதி சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, கோயில் நிர்வாகிகள், நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்டோர் என்று மொத்தமாக 50 பேர் மட்டும் மலை ஏறினர். இதனைத் தொடர்ந்து 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்ற அமைக்கப்பட்ட மேடையில் ஏறி நீதிபதிகள் நின்றனர்.
30 கிலோ நெய், 50 மீட்டர் பருத்தி துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டதும் மலை அடிவாரத்தில் இருந்த பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. இதற்கிடையே, தீபம் ஏற்றப்படும் முன்பாக தூண் அருகே நின்ற நபர் ஒருவர், முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் செய்து காட்டிய வைரல் செய்கையை செய்து காட்டினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நேற்று வெளியானதுமே இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் பலரும் இந்த செய்கையை செய்து காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில்தான், மலைஉச்சியில் உள்ள துண் அருகே நின்று கொண்டு வைலட் கலர் சட்டை அணிந்த நபர் ஒருவர் செய்த சைகை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.




Click it and Unblock the Notifications
