வழி விட்டுட்டாரே வருண பகவான்.. திருப்பரங்குன்றம் தூணில் ஒளிர்ந்த தீபம்! மன’முருக’ பக்தர்கள் தரிசனம்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று தீபம் ஏற்பட்டது ஏற்றப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு இடையே தீபம் ஏற்றப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெளிவான வானிலை காணப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி ஆண்டு தோறும் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளாகவே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த நடைமுறை மாற்றப்பட்ட நிலையில், தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபம்
தூணில் தீபமேற்ற வேண்டுமென நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட காரணங்களால் தீபம் ஏற்றப்படவில்லை. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பாக இந்த ஆண்டு தீபத்தை ஏற்றலாம் என உத்தரவிட்டது.
தவெக அரசு
ஆனாலும் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் தீபம் ஏற்ற வில்லை. இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் நவம்பர் 28ஆம் தேதியான இன்று தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் படையை பயன்படுத்திக் கொள்ளலாம் என சொன்னது.
இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இன்று சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து மண் சட்டியினால் ஆன தீப கொப்பரைகள் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, காடா துணி, நெய், கற்பூரம் உள்ளிட்டவை மூலம் தீபம் உருவாக்கப்பட்டது.

தீப தரிசனம்
சரியாக மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு நிலையில் அரோகரா என்ற பக்தி முழக்கத்திற்கு இடையே பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பக்தர்கள், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் திரண்டு இருந்தனர்.
வழி விட்ட மழை
தீபம் ஏற்றப்பட்ட போது அரோகரா என்ற முழக்கத்தால் திருப்பரங்குன்றமே அதிர்ந்தது. இருண்ட வானிலை காரணமாக மாலை நேரத்தில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதுமே இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பக்தர்கள் மழை குறுக்கீடு இல்லாமல் தீபம் ஏற்றப்படுமா என பக்தர்கள் மனதவிப்போடு காத்திருந்தனர். ஆனால் வருண பகவான் வழிவிட்டு தீபம் ஏற்ற நிகழ்வுக்கு உதவினார். தீபம் ஏற்றிய பின்னர் அதற்குப் பிறகும் மழை பெய்யவில்லை. இதனால் எந்தவித இடையூறும் இன்றி பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.


Click it and Unblock the Notifications
