காலம் பதில் சொல்லும்.. விஜய் போட்டோவை போட்டு.. எம்ஜிஆர் பாட்டுடன் சிபி சத்யராஜ் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் சூழல் இப்போது பரபரப்பாக இருக்கும் நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்ட 3 பதிவுகள் கவனம் பெற்று இருக்கின்றன. குறிப்பாக முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து "காலம் பதில் சொல்லும்" என்று அவர் பதிவிட்டிருப்பது ரசிகர்களுடைய பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நேரத்தில், இந்த பதிவுகள் வந்திருப்பதால் இதை அந்த விவாகரத்துடன் தொடர்புபடுத்தி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிபி சத்யராஜ் பதிவு

சிபி சத்யராஜ் இன்று வெளியிட்ட முதல் ஸ்டோரில், எம்ஜிஆரின் "ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே" என்ற பாடல் வரிகளை பகிர்ந்து இருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு, பக்தர்களின் கோரிக்கை, அரசு தரப்பு நடவடிக்கைகள் என விவகாரப் பெரிய அளவில் பேசப்படும் ஒரு நிலையில் முருகன் பாடல் வரிகளை அவர் பகிர்ந்து இருப்பது எதற்காக? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதை திருப்பரங்குன்றம் விவாகரத்துடன் நடக்கும் சர்ச்சைக்கு மறைமுக விமர்சனமாக அவர் பதிவிட்டு இருக்கிறாரா? என்று ரசிகர்கள் விவாதிக்கிறார்கள்.

Sibi Sathyaraj Vijay Tirupparankundram

விஜய் பேசிய வீடியோ

அடுத்ததாக அவர் பகிர்ந்த ஸ்டோரியில், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் முதல்வர் விஜய் எலக்சன் சமயத்தில் விமர்சித்ததை இப்போ பகிர்ந்திருக்கிறார். இரண்டு கட்சிகளும் வெளியே எதிரெதிராக மோதிக் கொள்வது போல இருந்தாலும், சில அரசியல் விஷயங்களில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்த வீடியோவில் விஜய் பேசி இருக்கிறார். அதை இப்போ சிபி தனது இன்ஸ்டா பக்கத்தில் 2வது ஸ்டோரியாக பகிர்ந்து இருக்கிறார்.

காலம் பதில் சொல்லும்

3வதாக விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்த சிபி சத்யராஜ், "காலம் பதில் சொல்லும்.. நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் அண்ணா" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த வரிகள் விஜய்க்கு ஆக அவர் வெளிப்படையாக ஆதரவு கொடுப்பதை காட்டுகிறது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருகிறார் என்ற சமயத்தில் இருந்து, அவருக்கு தொடர்ந்து சிபி சத்யராஜ் சப்போர்ட் கொடுத்து வருகிறார். அவருடைய அப்பாவும், அக்காவும் திமுக ஆதரவாளர்களாக இருந்தாலும் சிபி சக்கரவர்த்தி ஆரம்பத்திலிருந்து விஜய்க்கு சப்போர்ட்டாகவே பேசி வருகிறார். ஆனால் இப்போது அவர் வெளியிட்ட ஸ்டோரிகளுக்கான காரணத்தை விரிவாக அவர் விளக்கவில்லை. அதனால் இதை வைத்து சோசியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+