திருப்பரங்குன்றம் தீபம்: திருவண்ணாமலையில் இருந்து வந்த 6 பேர்.. பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து வந்த 6 பேர் கொண்ட பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழுவினர், காடா துணிகளைக் கொண்டு திரிகளைத் தயாரித்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில், சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. கோயில் ஸ்தானிக பட்டர்களும், உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பி. பார்த்திபன் ஆகியோரும் சூடத்தை ஏற்றி பூஜை செய்து பிறகு தீபத்தை ஏற்றினர்.

Thirupparankundram deepam Supreme court

முருகனுக்கு அரோகரா

மலையடிவாரத்தில் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள், தீபத்தைப் பார்த்து பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். சங்கொலி, கைலாய வாத்தியங்கள் ஒலித்தன. ஆங்காங்கே வாண வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்கின.

முன்னதாக கல் தூணைச் சுற்றிலும் மரங்களால் சாரம் கட்டப்பட்டு, அதன் மேல் நின்று விளக்கேற்றுவதற்கு ஏதுவாகப் பலகைகள் அடிக்கப்பட்டு தீப மேடை தயார் செய்யப்பட்டது. அதில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை பட்டர்கள் மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழுவினர் மாலை 4.30 மணியளவில் தூண் உள்ள பகுதிக்கு வந்தனர்.

ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு, முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றும்போது தொல்லியல் துறை அதிகாரி அறவாழி தலைமையிலான குழுவினரும், கோயிலின் நான்கு ஸ்தானிக பட்டர்களும் மலை உச்சியில் இருந்தனர்.

Thirupparankundram deepam Supreme court

என்னென்ன பொருட்கள்?

தீபம் ஏற்றுவதற்கு 30 கிலோ நெய், திரி தயாரிப்பதற்கான 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண்பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையிலிருந்து வந்த 6 பேர் கொண்ட பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழுவினர், மண் கலயங்களை வைத்து காடா துணிகளைக் கொண்டு திரிகளைத் தயாரித்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நெய் - திரி

தூணில் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டு அதில் எண்ணெய்யில் நனைந்த திரி வைக்கப்பட்டது. அந்த விளக்கில் நெய் ஊற்றப்பட்டு பிறகு அதற்குள் அடுக்கடுக்காக மூன்று மண்கலயங்கள் வைத்து முழுக்க நெய் ஊற்றி பெரிய அகல் விளக்கிலிருந்து திரி பகுதி மண் கலயங்களை மறைத்தவாறு மேலே ஒன்றிணைத்து கோபுரம் கோல கட்டப்பட்டது.
கட்டப்பட்ட துணிகளுக்குள் சூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தூணின் மேற்பகுதி முழுக்க நெய்யில் நனைந்த திரி உள்ள நிலையில், முனையில் தீபம் ஏற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+