"நடக்க முடியவில்லை".. தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் மலைக்கு தூக்கி செல்லப்பட்ட ஓய்வு நீதிபதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்றும் பணியை கவனிக்கும் பொறுப்பு ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன், வி பார்த்திபன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இவர்கள் 2 பேரும் இன்று மலை மீது ஏறி தீபத்தூணில் தீபம் ஏற்றினர். முன்னதாக மலையேற சிரமப்பட்டதால் நீதிபதியை மலைக்கு தூக்கி சென்றனர்.

thiruparankundram-deepam-retired-judge-was-carried-up-the-tiruparankundram-hill

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் அறங்காவலர் குழுவினரின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.

இதனால் கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன் மற்றும் வி பார்த்திபன் ஆகியோரை பொறுப்பாளர்களாக உச்சநீதிமன்றம் நியமித்து இருந்தது. இதையடுத்து 2 நீதிபதிகளும் சேர்ந்து மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்றினர்.

இதற்காக இருநீதிபதிகளும் தங்களின் குடும்பத்தினருடன் மலைக்கு ஏறினர். மலை மிகவும் செங்குத்தாக இருந்தது. இதனால் ஓய்வு நீதிபதிகள் 2 பேரும் நடக்க சிரமப்பட்டனர். ஓய்வு நீதிபதி பார்த்திபன் அவ்வப்போது சேரில் அமர்ந்து ஓய்வு எடுத்து மலை மீது ஏறினார். அதன்பிறகும் அவர் மலை ஏற சிரமப்பட்டார். இதனால் ஊழியர்கள் கொஞ்சம் தூரம் அவரை கைத்தாங்கலாக தூக்கி சென்றனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அடிவாரத்தில் இருந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் 'கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டனர். அதுமட்டுமின்றி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருதரப்பினர் தங்களின் கைகளில் இருந்த காவி துண்டை தூக்கி தலைக்கு மேலே சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக இன்று காலையில் மலை மீது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேரம் ஆக ஆக பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தீபம் ஏற்றப்பட்ட குழுவினர் மக்களுக்கான அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தனர். இருப்பினும் சிலர் மாற்று பாதைகள் வழியாக மலையேற முயன்றனர். ஆனால் அவர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+