ஆப்ரேஷன் சிந்தூரை படமாக்கும் ஆக்ஷன் கிங்.. ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய அர்ஜுன்.. சுதந்திர தினத்துக்கு சம்பவம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல், அதற்கு பிறகு இந்தியா மேற்கண்ட ஆபரேஷன் சிந்தூர்... இந்த இரண்டு சம்பவங்களையும் பின்னணியாக வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படம் உருவாக போகிறது. அதுவும் ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் தொடக்கமே அயோத்தியில் ராமர் கோவிலில் நடைபெற்றிருப்பது இப்போது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்று இருக்கிறது.

அர்ஜுனின் அடுத்த படம்

அர்ஜுன் என்றாலே ஆக்சன் படங்கள், தேசப்பற்று சார்ந்த கதைகள் என்று அவருக்கென தனி அடையாளம் இருக்கிறது. இப்போது சமீபகாலமாக அவர் அது போன்ற படங்களில் நடிக்கவில்லை, இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பழைய மாதிரி நீங்கள் நாட்டுப் பற்றுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இப்போ சமகால இந்திய வரலாற்றில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார்.

அதற்கான பூஜை நவம்பர் 27ஆம் தேதி அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரத்தில் நடைபெற்றது. அந்த படத்தின் தொடக்க விழாவை அங்கே நடத்துவது ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல் பட குழுவுக்கு முக்கியமான தருணமாக இருக்கிறது. இந்த படத்தை பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அனூப் மோகன் தயாரிக்கிறார். படத்தின் கதையை ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவ் எழுதியிருக்கிறார்.

Arjun Operation Sindoor Pahalgam

ராணுவ கதை

ராணுவ பணியில் நேரடியாக இருந்த அனுபவம் கொண்ட ஒருவர் இந்த கதையை எழுதுவதால் ராணுவத்தின் செயல்பாடுகள், நாட்டை பாதுகாப்பதற்கான சவால்கள், வீரர்களின் மனநிலை உள்ளிட்ட விஷயங்களை நம்பகத்தன்மையுடன் திரையில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். பஹல்காம் தாக்குதல் என்பது இந்தியர்களால் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியுமா? சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் அப்பாவி மக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என் மகளுக்கு மட்டுமல்ல, எந்த பொண்ணுக்கும் இனி இப்படி நடக்க கூடாது! கமிஷனர் ஆபீஸ்க்கு போன நடிகர் அர்ஜுன்
அதற்கு பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சித்தூர் ராணுவ நடவடிக்கை, அதையொட்டி பதட்டம் என பல விஷயங்களை சர்வதேச அளவில் பேசப்பட்டன. இப்போது இந்த சம்பவங்களை திரைப்படமாக கொண்டு வரும்போது வெறும் போர் காட்சிகளை மட்டும் காட்டாமல் அந்த நிகழ்வுகளுக்கு பின்னால் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளையும் சொல்ல வேண்டும் என்பதே படக்குழுவின் நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9து மொழியில் ரிலீஸ்

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த படம் ஒரே மொழியில் வெளியாகப் போவதில்லை. இந்தி உட்பட மொத்த 9 மொழிகளில் படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இந்த கதையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை மொழிகளில் உருவாக்கப்படுகிறதாம். படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதை விரைவில் ஒரு பிரத்தியேக அறிவிப்பின் மூலம் வெளியிடப் போவதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.

Arjun Operation Sindoor Pahalgam

சுதந்திர தினத்தில் ரிலீஸ்

படப்பிடிப்பு வரும் மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதைவிட முக்கியமாக இந்தியாவில் 81 வது சுதந்திர தினமான 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். சுதந்திர தினத்தன்று தேசப்பற்று மற்றும் இராணுவ பின்னணி கொண்ட ஒரு படத்தை வெளியிடுவது என்பது படக் குழுவின் திட்டமாக இருக்கிறது. ராமர் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் பயணம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் திரையரங்குகளை அடையுமா? என்பதை பார்க்கலாம்.

மகளுக்காக நடிகர் அர்ஜுன் கொடுத்த புகார் எதிரொலி.. பயில்வான் ரங்கநாதனிடம் போலீசார் விசாரணை
படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், படத்தின் முதல் அறிவிப்பே இவ்வளவு பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அவருடைய இயக்குனர் பயணத்தில் இன்னொரு முக்கியமான படமாக அமையுமா? என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+