பாஜகவின் கருத்தோடு திமுக ஒத்து போவது ஏற்றுக்கொள்ள முடியாது.. திருமுருகன் காந்தி பேட்டி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: திமுக - காங்கிரஸ் இடையிலான போட்டி கிடையாது. தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சனை. எனவே தொகுதி மறுவரையரை நிலைப்பாடில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என திருமுருகன் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தொகுதி வரையறை குறித்து திமுக எடுத்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. தொகுதி வரைமுறை குறித்து விழிப்புணர்வை இந்திய அளவில் ஏற்படுத்தி முதன்மையான கட்சி திமுக தான். திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநில உரிமை சார்ந்த இயங்குகின்ற இயக்கம் திமுக. அப்படிப்பட்ட கட்சி இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுத்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

DMK aligning with the BJP s views is unacceptable Thirumurugan Gandhi in an interview

காங்கிரஸிக்கும் - திமுகவிற்குமான போட்டி கிடையாது. இது காங்கிரஸ் சம்பந்தப்பட்டது கிடையாது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியதால், உங்களுடைய ஏமாற்றம் புரிந்து கொள்ள முடிகிறது. இது தமிழ்நாட்டு பிரச்சனையாக நீங்கள் பார்க்க வேண்டும். திமுக பாஜக கூட்டணி சார்ந்த சூழல் தற்போது இருக்குமா என்று தெரியவில்லை. பாஜகவின் கருத்தோடு திமுக ஒத்து போவது வன்மையான கண்டனத்திற்கு உரியது ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டத்தையும் கொண்டு வந்ததில்லை இவ்வாறு திருமுருகன் காந்தி பேட்டியின் போது கூறினார்.

'காலம் காத்திருந்து பதில் சொல்லும்'.. அது இது தானா.. தோற்கடித்த திமுகவே ஜெயிக்க வைக்க போகிறது
தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று அளித்த பேட்டியில், திமுக செய்வது எட்டப்பன் வேலை.. தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரையறை மசோதா நல்லது கிடையாது.. தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று கண்டித்துள்ளார்.

ஆனால் இதனை மறுத்துள்ள திமுக, புதிய மசோதா வரைவில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை நிர்ணயித்து, மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் 50 சதவீதம் உயர்த்த உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2051-ஆம் ஆண்டு வரை மாற்றப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு நல்லது தான். தமிழ்நாட்டிற்கு எம்பிக்கள் எண்ணிக்கை 1971 போல் குறையாது.இப்போது அதிகரிக்கவே செய்யும். 1971 விகிதாசாரப்படி தொகுதி மறுவரையறை செய்திருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது தான் என்றும் திமுக விளக்கம் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+