பாவம் முகமது சிராஜ்.. ரொம்ப எமோஷனலான வீரர்.. கம்பீரின் சேட்டை நிற்காது.. அஸ்வின் பகீர்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய சோகம் அளிக்கும் விஷயம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். மிகவும் எமோஷனலான வீரரான சிராஜ் உடன் தற்போது யாராவது ஒருவர் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் சேர்க்கப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியின் போதே சிராஜ் சேர்க்கப்படாதது கடுமையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் 2வது டெஸ்டிலும் அவரை பெஞ்ச் செய்திருக்கின்றனர்.

Mohammad Siraj

இந்த நிலையில் 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இதனால் இந்திய அணியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

இதுதொடர்பாக இந்திய ஜாம்பவான் அஸ்வின் பேசுகையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிராஜ் இனி விளையாடுவதற்கான சூழல் இல்லை என்று கருதுகிறேன். நிச்சயமாக நிதிஷ் குமார் ரெட்டிக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட சிராஜ்க்கு இருக்காது. சிராஜின் வாழ்க்கையில் இது மிகவும் மோசமான தருணமாக இருக்கக் கூடும். யாராவது அவருடன் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

அவரின் புலம்பலை யாராவது சென்று கேட்க வேண்டும்.. அவருக்கு அடுத்தக் கட்ட பாதையை காட்ட வேண்டும். ஆனால் இந்த சம்பவம் சிராஜ் மனதில் ஆறாத வடுவாக இருக்கும். அடுத்தஒப் போட்டியில் சிராஜ் நிச்சயமாக 145கிமீ வேகத்தில் வீசி 5 விக்கெட்டுகளை கட்டாயமாக வீழ்த்த வேண்டிய தேவை உள்ளது. எனக்கு தெரிந்த்யு இந்திய அணி அனுபவ வீரர்களை வைத்து இனி விளையாடப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த முடிவு சிராஜ்க்கு எளிதாக இருக்கப் போவதில்லை. வேறு மைதானத்திலும் கூட இதுவே நடக்கக் கூடும். சிராஜ் எமோஷனலான ஒரு வீரர்.. அதேபோல் இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. இன்று சிராஜ்.. நாளை யார் என்பது தான் என்னுடைய கேள்வி என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+