திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம்.. வழிகாட்டுதல் குழுவில் 13 பேர்.. யார் யார்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழிகாட்டுதல் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை போலீஸ் கமிஷனர், சிஆர்பிஎஃப் ஐ.ஜி உள்ளிட்ட 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், திருக்கோயில் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

13-Member Steering Committee to Oversee Lamp Lighting on Thirupparankundram Hill

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, அதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், சிஆர்பிஎஃப் ஐ.ஜி., ஸ்தானீக பட்டார்கள் 2 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள்

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் - பார்த்திபன், வைத்தியநாதன்
மதுரை மாவட்ட ஆட்சியர் - நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ்
மதுரை மாநகர காவல் ஆணையர் - ராஜேந்திரன் ஐ.பி.எஸ்
திருமலா விக்ரம் ஐ.பி.எஸ் IGP/CRPF
கண்காணிப்பு சிறப்பு அலுவலர் - வீரராகவ் ஐ.ஏ.எஸ்
திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் - கெரக்னாக் லிதியா
முகேஷ் குமார் - CRPF IGP
மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்
கோவில் ஸ்தானிக பட்டர்கள்: சாமிநாத பட்டர், ரமேஷ் பட்டர், அஜித் பட்டர்
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர்

உள்ளிட்ட 13 பேர் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

5 மணிக்கு தீபம்.. மலையேறும் குழுவினர்

இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படவிருக்கிறது. அதற்காக தூண் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கொப்பரை வைத்து தீபம் ஏற்ற அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவினர் மலைக்கு மேல் சென்றதும் தீபம் ஏற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தீபம் ஏற்றும் குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் மலை உச்சிக்குச் செல்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், வைத்தியநாதன் உள்ளிட்டோர் மற்றும் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டவர்கள் மலைப் படிகள் வழியாக மலை மீது சென்று கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+