திருப்பரங்குன்றம்: 50 பேருக்கு மட்டுமே அனுமதி.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு மலை ஏற முயன்றதால் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது ஏற அனுமதி கோரி பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது ஏற 50 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில பக்தர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலை ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்ஹா அருகில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

Tension at Thirupparankundram as Devotees Attempt to Breach Barricades to Climb Hill

கடந்த 24 ஆம் தேதி தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருந்தது.தேவைப்பட்டால் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் உதவியை நாடவும் உத்தரவிட்டிருந்தது. அதே வேளையில், தீபத் திருநாளைத் தவிர மற்ற நாட்களில் தீபம் ஏற்ற அனுமதி கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், கடந்த 24 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளில், குறிப்பிட்ட கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. மேலும், போலீசார் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மலையேற முயற்சி செய்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளில் கல் தூணில் தீபம் ஏற்றப்படாததை உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் சிஆர்பிஎப் படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உத்தரவிட்டது. மலையில் உள்ள தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மலையில் உள்ள தர்காவில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழு தீபம் ஏற்றும் நேரத்தை முடிவு செய்யவும், நிகழ்ச்சியைக் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முருகன் கோவில் மலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, முஸ்லிம்களும் தர்காவில் சிறப்புத் தொழுகைக்காக இன்று அதிக அளவில் மலைக்குச் சென்றுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும் பதற்றம் நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் மலை மீது ஏற 50 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்புகளை மீறி மலை உச்சி பகுதிக்கு செல்லக்கூடிய அடிவாரம் நோக்கிச் இந்து அமைப்பினர் சென்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+