"தமிழகம் தீக்கிரையாக்கப்படுகிறது".. திருப்பரங்குன்றம் தீபம் உத்தரவை சாடிய கரப்பான்பூச்சி கட்சியின் சவ்ரவ் தாஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''பிரதமர் மோடியின் கட்சி இந்து - முஸ்லிம் என்ற அடிப்படையில் தமிழகத்தை மதரீதியாக பிரிக்க முயற்சிப்பதை பார்க்கும்போது அது எனக்கு கோபத்தையும், வருத்தத்தையும் தருகிறது. உச்சநீதிமன்றம் 10 அடி முன்னோக்கி சென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நம் நாட்டுக்கு நல்ல சகுனமாக இல்லை. அமைதியான, மகிழ்ச்சியான மாநிலம் உண்மையில் தீக்கிரையாக்கப்படுகிறது'' என்று திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

thiruparankundram-deepam-a-happy-state-is-being-put-on-fire-cjp-saurav-das-slams-bjp-and-supreme-c

கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு அதனை செய்யவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் செயல்பாட்டின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அதுமட்டுமின்றி இன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான சவ்ரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சவ்ரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''நான் தமிழ் சகோதரர்கள் மற்றுமு் சகோதரிகளுடன் தான் வளர்ந்தேன். இதனால் தமிழ் சமூகத்தின் மதிப்பு, மதநல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்டவை பற்றி எனக்கு தெரியும்.

ஆனால் பிரதமர் மோடியின் கட்சி இந்து - முஸ்லிம் என்ற அடிப்படையில் மாநிலத்தை மதரீதியாக பிரிக்க முயற்சிப்பதை பார்க்கும்போது அது எனக்கு கோபத்தையும், வருத்தத்தையும் தருகிறது. உச்சநீதிமன்றம் 10 அடி முன்னோக்கி சென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நம் நாட்டுக்கு நல்ல சகுனமாக இல்லை. அமைதியான, மகிழ்ச்சியான மாநிலம் உண்மையில் தீக்கிரையாக்கப்படுகிறது.

பாஜகவின் இந்த மலவான மதவா அரிசயலமைநிராகரிப்பது மட்டுமின்றி அதை முழு பலத்துடன் எதிர்க்கவும் வேண்டும் எனது தமிழ் நண்பர்களை நான் கேட்டுக்கொளகிறேன். இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிற வாழ்வாதார பிரச்சனைகளை தீர்ப்தற்கு பதிலாகபிரதமர் அரசு தமிழக சமூகத்தைமரதரீதியாக பிரிப்பதில் மும்முரமாக உள்ளது. இரண்டு குஜராத்திகள் அல்லது டெல்லி உத்தரவில் தமிழகத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படக்கூடாது'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+