Rainfall: விடாது கொட்டி தீர்க்கும்.. இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் இடம் எது? தமிழ்நாட்டில் எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடம் மேகலாயாவில் உள்ள மவுசிராம் ஆகும். இங்கு ஆண்டுக்கு தோராயமாக 1,187 செ.மீ அளவு மழை பெய்கிறது. அதேபோல, தமிழ்நாட்டில் அதிகம் மழை பெய்யும் இடம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 500 செமீ மழை பதிவாகும். அது எந்த இடம் என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால் பெரும்பாலான மழைப்பொழிவை பெறுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி வட இந்தியா முழுவதும் என இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையின் போதே அதிக மழையை பெறுகிறது.

Which place in India receives the most rainfall And do you know which place in Tamil Nadu does

டாப் 5 இடங்கள் எவை?

மழை பெய்யும் அளவை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறுபடுகிறது. சில பகுதிகளில் அதீத மழை.. சில பகுதிகளில் கடும் வறட்சி என நிலவுகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் அதிக மழை பொழியும் டாப் 5 இடங்கள் எவை என்று இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக மழை பொழியும் இடமாக இருப்பது மேகாலயாவில் உள்ள மவுசிராம் ஆகும். மவுசிராம் பகுதியில் ஆண்டுக்கு சுமார் 1,187 செ.மீ அளவு மழை பொழியும். இந்த இடம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் இடமும் மேகாலயாதான். அங்குள்ள சிரபுஞ்சியில்தான் இந்தியாவிலேயே அதிக மழை பொழிகிறது. இங்கு ஆண்டுக்கு 1,177 செ.மீ மழை பெய்கிறது.

3 ஆம் இடத்தில் எந்த இடம்?

மகாராஷ்டிராவில் உள்ள அம்போலி இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இந்த அம்போலியும் ஒரு மலைவாசஸ்தலமாகும். மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அம்போலி, கடல் மட்டத்தில் இருந்து 690 - 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு தோராயமாக 750 செ.மீ மழை பெய்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆகும்பே இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 700 செ.மீ மழை பெய்கிறது. கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் இந்த இடம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அடந்த காடுகளுக்கு நடுவே உள்ளது. லிஸ்ட்டில் 6-வது இடத்தில் மகாகபலிஷ்வர் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இந்த இடத்தில் 560 செ.மீ மழை பெய்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,353 மீட்டர் உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் இடம் எது தெரியுமா?

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையின் சின்னக்கல்லார் பகுதி ஆகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் இங்கு மழை கொட்டி தீர்ப்பது வழக்கம். இதனால், தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 500 செ.மீ மழை பெய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+